பார்க்க சிறிதானாலும் அதன் பயனோ பெரிது..!!
ஏலக்காய் வாசனைப் பொருட்களில் இதுவும் ஒன்று. இதன் மணமும், சுவையும் எண்ணிலடங்காதவை. நாள்தோறும் ஒரு ஏலக்காயில் உள்ள விதையைப் பொடித்து ஒரு ஸ்பூன் தேனும் சேர்த்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்க்கும் திறனை காப்பதுடன், ஆரோக்கியமும் விருத்தியாகும்.
வாசனையும், சுவையும்
சிறு நாக்கு வளர்ச்சி என்பது தொண்டைக்கம்மல் முதலியவை உள்ளவர்கள் எழும் சிறு துண்டு பட்டையும் சேர்த்து கசாயம் வைத்து மேல் நோக்கி அமர்ந்து வாய்விட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும். தலைசுற்றல், வாந்தி எடுத்தால், வாந்தி வரும் போன்ற நிலை, உணவு செரிக்காமல் ஏற்படும் பித்த நீரால் வரும் கோளாறுகளுக்கு, இவைகளுக்கு சிறிதளவு ஏலம், சீரகம் இரண்டையும் சேர்த்து கஷாயம் வைத்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் முதலியன உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் அளவு நெல்லிக்காய் சாற்றுடன், ஒரு நல்ல ஏலக்காய் விதைகளை, அரைத்து சேர்த்து ஒரு நாளைக்கு மூன்று தடவை சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். வியாதிக்கு கூட இது நல்ல மருந்தாகும், என்று சொல்லப்படுகிறது. அவர்கள் முழு ஏலக்காயை மேல் தோலுடன் சேர்த்து மென்று சுவைத்து தின்றால் நல்ல குணம் கிடைக்கும்.
நல்ல மருந்தாக
வயிற்றிலுள்ள சீரணமாகாத உணவு, புளித்துப் போய் வாந்தி முதலியவை ஏற்படும் தொல்லையை தடுக்கப்படலாம். 2 ஏலக்காய் அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து சிறிதளவு சப்பி சப்பி சாப்பிட்டால் அதிக உணவு அல்லது ஜீரணமாகாத உணவு முதலியவைகள் ஏற்படும் சிரமம் குறையும். குறிப்பாக சற்று அதிகமாக மாமிச உணவு உண்டு சிரமப்படுபவர்களுக்கு இது நல்ல மருந்தாக அமைகிறது.
இரவு படுக்கைக்கும் முன் பாலில் சிறிதளவு தேனை, ஏலக்காய் பொடி மிகச் சிறிதளவு சேர்த்து, சாப்பிடுவது உடலுக்கு நல்லது இதை கொடுப்பதால் ஜீரண சக்தியை கொடுக்கும். வாயும் கமகமவென்று மணக்கும். ஞாபக சக்தியை கூட அதிகரிக்கச் செய்யும். என்று சொல்லப்படுகிறது. எந்த வாசனை பொருட்களை உபயோகித்தால் அது நன்மைக்குப் பதில் தீங்கையே தரும் என்று சொல்லவேண்டியதில்லை.
யுனானி, ஆயுர்வேத
பல உணவுப் பொருள்களையும் வாசனையும், சுவையும், ஊட்டும் தகுதி, வாய்ந்த தன் தகுதியை அறிந்து மேல் நாட்டவர்கள் நல்ல விலை கொடுத்து வாங்குவதால் உற்பத்தியாவது. பல ஆண்டு கால உணவு பண்டங்களுக்கு உபயோகிப்பது டன் யுனானி, ஆயுர்வேத மருந்துகளுக்கும், உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் வாசனையும், சுவையும் யாரும் விரும்பத்தக்கதாகும். நம் நாட்டில் வெற்றிலை பாக்குடன் சிறிதளவு சேர்த்து மெல்ல பழக்கமும் உண்டு.
நம் நாட்டுக்கு வெளிநாட்டு செலவாணி தேடிக் கொடுக்கும் சிறந்த விளைபொருட்களில் ஏலமும் ஒன்றாகும். இவையெல்லாம் மலைபடு திரவியத்தின் பால், பழம் 2500 அடி உயரத்திற்கு மேல் உள்ள தென்னாட்டில் பல மலைப்பகுதிகளில் விளைகின்றன. தமிழ்நாட்டில் சிறிதளவும், கேரள, மைசூர், கூர்க் முதலிய பகுதிகளில், இலங்கை, இந்தோனேசியா முதலிய நாடுகளிலும் விளைச்சல் அமோகமாக இருக்கிறது.