இஸ்பேட் ராஜாவின் தாறுமாறான போட்டோ ஷூட்
காதல் மற்றும் ரொமான்ஸ் கதை தளமாக இருந்தும் பிளேபாய் கதாபாத்திரத்தில் நடித்தாலும் தான் ஒரு நல்ல பையன் என்ற இமேஜ் மாறாது இருப்பவர் ஹரிஷ் கல்யாண்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பியார் பிரேமா காதல், தாராள பிரபு என இளைஞர்களை ஈர்க்கும் வகையில் படப் பட்டியலை கொண்ட இவர் தாறுமாறான போட்டோ ஷூட் தந்துள்ளார்.
இருட்டில் வெளிச்சம்
ஐ, மி, மைசெல்ப் என்ற ஆங்கில வார்த்தைகளுடன் தன்னுடைய ஃபோட்டோஷூட்டை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் ஹரீஷ் கல்யாண்.

கருமை சூழ வெண்மையாகத் தெரிந்தது இவரின் முகமும் கரங்களும் மட்டுமே.

கூர்மையான பார்வையால் கருமையை தாண்டி வருகிறது இவரின் கருவிழிகள்.

இருட்டில் இருந்தாலும் ஆண்மையின் கம்பீரத்தோடு காட்சியளிக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

கதை சொல்லும் படம்
ரொமான்டிக் ப்ளே பாய் கதாபாத்திரத்தில் இவரை இயக்குனர்கள் தேர்ந்தெடுப்பதில் தவறே இல்லை என்பது போல் பெண்களை காதலில் ஈர்க்கும் வசீகரத்துடன் காட்சி அளிக்கிறார்.

படம் பேசும் கதைகள் மாறி கண்களே பல காதல் கதைகளைக் கூறும் போலிருக்கிறதே!

காதல் படங்களில் நடித்தவர் காதல் தோல்வியில் இருப்பது போல் காட்சியளிக்கிறார்.

புகைப்படங்களுக்கு சிரிப்பது அழகு என்பதற்கு முரணாக முரைத்தாலும் அழகாக இருக்கக்கூடும் என உணர்த்துகிறார் ஹரிஷ் கல்யாண்.

இந்த கெட்டப்களை விட பெண் ரசிகர்களை ஈர்க்கும் காதல் ஹீரோவாக காட்சியளிக்களாமே! என்ன மக்களே உங்களோட கருத்த நீங்க பகிருங்க.