போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி அறிவிப்பு
போலியோ நோய் ஒழிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்து போடப்படும். போலியோ சொட்டு மருந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும். ஜனவரி 31 போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளன.
43 ஆயிரம் முகாம்கள் தமிழகத்தில் ஏற்படுத்த பட உள்ளன. காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்துகள் அருகிலுள்ள முகம்களுக்குச் சென்று போட்டுக் கொள்ளலாம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட, கொரோனா பாதிப்பு இல்லாத குழந்தைகள் என 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம். கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கும் குழந்தைகள், போலியோ சொட்டு மருந்து போடுவது தவிர்க்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளன.