விஜய் எனக்கு போட்டியா…? கடுப்பான சீமான்…!
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அனைத்துக்கட்சிகளும் இறுதி கட்டத்தை எட்டிவிட்டனர்.
இந்த தேர்தலில் அனைத்துக்கட்சிகளும் தனித்தனியாக களம் காணும் நிலையில், திமுக மட்டும் கூட்டணி கட்சிகளோடு களத்தில் உள்ளது. எதிர்கட்சிகள் தனிதனியாக களத்தில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் திமுகவை கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த உள்ளாட்சி தேர்தல் விஜய் மக்கள் இயக்கம் கனிசமான இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அதே தெம்புடன் இந்த முறையும் களத்தில் உள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு விவாதத்தில், நெறியாளர், விஜய் மக்கள் இயக்கம் கடந்த உள்ளாட்சி தேர்தலில் கனிசமான வெற்றியை பெற்றது. ஆனால் 10 ஆண்டுகள் அரசியல் களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியால் குறைவான தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லையே என கேள்வி கேட்கப்பட்டது.
இதனால் கோபமான சீமான், விஜய் கட்சியை பற்றி என்னிடமே கேட்கிறீர்கள், ஆனால் திமுக, விஜயகாந்த், கமல் ஆகியோரிடம் கேட்பதில்லையே என்றும், விஜய் மக்கள் கட்சியினருக்கு தனி கொள்கை, கோட்பாடு ஒன்று உள்ளதாகவும், எங்களுக்கு தனி கோட்பாடு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து ஊடகங்கள் தான் பேசுகின்றன. அவர் கட்சி ஆரம்பித்து கொள்கை குறித்து பேசிய பிறகு பேசினாலும் பரவாயில்லை. கட்சி ஆரம்பிப்பதாக சொல்லாத அவர் எங்களை முந்திவிட்டார் என்று சொல்வதெல்லாம் என்னத்த சொல்ல” என்றார்.