செய்திகள்தமிழகம்விழிப்புணர்வு

தமிழகத்தில் இன்று ஊரடங்கா!இல்லையா?

கொரோனா எனும் பெரும் தொற்று பரவிக் கொண்டே இருக்க வீட்டுக்குள் இருப்பதுதான் மிகவும் சரியான முடிவு என்று முடிவெடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஊரடங்கை பிறப்பித்துள்ளார். எப்பொழுதிலிருந்து ஊரடங்கு என்னவெல்லாம் செயல்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 14 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்ததோடு இரண்டு நாட்கள் மூச்சு விட நேரம் கொடுப்பது போல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து விதமான கடைகளும் செயல்படலாம் என்று முதலமைச்சர் அதிரடியாக சனிக்கிழமை காலையில் ஆணை பிறப்பித்தார்.

என்னதான் ஆச்சு!

மக்கள் அலை கடலாக அனைத்து பொருட்களையும் அடுக்கி வைக்கும் விதமாக கடைகளில் குவிந்து பொருட்களை பத்திரப் படுத்திக் கொண்டனர். எதற்கு இந்த அவசரம் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இந்த பதினான்கு நாட்களும் மதியம் 12 மணி வரை கிடைக்கும்.

எது அத்தியாவசியம்?

மருத்துவ சேவையில் அனைத்தும் செயல்படும். அனைத்து மருந்து கடைகளும் எப்பொழுதும் போல் செயல்படும்.

பால் பழம் காய் கடைகள் செயல்படும். நடைபாதை கடையாக இருந்தாலும் இவைகள் செயல்படும். நேரம் மட்டுமே கட்டுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மளிகை சாமான்கள், இறைச்சி மற்றும் மீன்களை இ-காமர்ஸ் வழியாக விநியோகிப்பது நண்பகல் வரை அனுமதிக்கப்படுகிறது.

உணவிற்கு திண்டாட்டமோ!

அம்மா உணவகங்கள் எந்த தடையும் இன்றி செயல்படும்.

ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிடும் சேவை இல்லாமல் பார்சல் சேவை மட்டும் உள்ளது. லாட்ஜ் வசதி உள்ள ஓட்டல்கள் செயல்பட அனுமதி இல்லை. தேனீர் கடைகள் மதியம் வரை மட்டுமே.

நடைபாதை தள்ளுவண்டி உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

முக்கியமாக ஸ்விக்கி ஜோமாட்டோ டுன்சோ போன்ற சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடி-மக்களுக்கு நடந்த அநியாயம்

டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை. மற்ற கடைகளை விட அதிகமாக குடிமக்கள் கூடிய இடம் டாஸ்மாக். 14 நாட்களுக்குத் தேவையான மற்ற சரக்குகளை விட இந்த சரக்குகள் பறிமுதல் ஆகியுள்ளது போலிருக்கிறது.

லாக்டௌன் 1

2020 மார்ச்சில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு திரும்பியுள்ளது. பூங்காக்கள் கோவில்கள் மால்கள் கடற்கரைகள் என அனைத்து பொதுமக்கள் கூடும் இடங்கள் திறக்கப்படாது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படாது. மக்கள் எங்கும் பயணிக்காத வகையில் எந்த விதமான வாகனங்கள் அதாவது பேருந்து மகிழுந்து ஆட்டோ என எதுவும் செயல்படாது. முக்கியமாக இ-பாஸ் அவசியம்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளி வரவேண்டும் என்ற நிலையில் மீண்டும் திரும்புகிறோம். அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டுமே செயல்படும் அதுவும் மதியம் 12 மணி வரை தான்.

விழிப்புணர்வு

சானிடைசர், சமூக இடைவேளையும், முக கவசமும் இவை அனைத்தையும் விட முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியவை. சிலேட்குச்சியின் தரப்பில் மக்களுக்கு கூறும் முன்னெச்சரிக்கை மாட்டின் கோமியம் மாட்டு சாணம், வேப்பிலை, மாவிலை, உப்பு, மஞ்சள் தூள் போன்ற கிருமி நாசினிகளை நம் பாரம்பரிய முறையில் பயன்படுத்தி வளமான வாழ்க்கையை வாழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *