சினிமாசெய்திகள்தமிழகம்

பவி டீச்சருக்காக வக்காலத்து வாங்கிய பார்த்திபன்..

பார்த்திபனின் இரவின் நிழல்

தற்போது பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் அனைவரும் மத்தியில் பேசப்படும் ஒரு படமாக உள்ளது இப்படத்தில் பார்த்திபன் மற்றும் மற்றவர்களின் நடிப்பு மிகவும் வித்தியாசமாகவும் அவர்களின் முழு திறமையை காட்டும் விதமாகவும் அமைந்துள்ளது என்று கூறி வருகின்றனர் பொதுவாகவே பார்த்திபன் படங்கள் என்றாலே அது அனைவரையும் சிந்திக்க வைக்கும் படமாக தான் இருக்கும் அவர் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அவர்கள் கூறும் வசனங்கள் முதல் அனைத்தும் மற்ற திரைப்படங்களை விட சற்று மாறுபட்டதாகவே இருக்கும் .

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மர்மமாகவே வைத்து வித்தியாசமான முறையில் அனைவருக்கும் புரிய வைக்க முயற்சிப்பார். எனவே பார்த்திபன் படங்களுக்கு தனி வரவேற்பு உள்ளது இந்நிலையில் தற்போது இவர் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் நடவடிப்பை பெற்றுள்ளது மேலும் இத்திரைப்படத்தின் மேல் அதீத நம்பிக்கை வைத்து பார்த்திபன் சமூக வலைத்தளங்களில் நல்ல முறையாக பேசி வருகிறார் இப்படி இரவின் நிழல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படத்தில் பவி டீச்சராக வந்த பிரகிடா ஹீரோயினியாக நடித்துள்ளார். இவரின் நடிப்பும் மிகவும் வித்தியாசமாகவும் உள்ளது என்று அனைவரும் இவரின் திறமையை பாராட்டி வருகின்றனர்

மேலும் படிக்க : பார்டி மூடில் சன்னி லியோன்..! ரசிகர்களுக்கு அழைப்பு…

பவி டீச்சரின் நடிப்பிற்கு பாராட்டு குவிந்த நிலையில் இவர் பேசிய ஒன்று மீடியாவில் மிக வைரலானது இந்நிலையில் தான் பேசியது தவறு என்றும் அதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாகவும் டீச்சர் மீடியாவில் கூறினார்.

பவி டீச்சருக்காக வக்காலத்து வாங்கும் பார்த்திபன்

இந்நிலையில் பவி டீச்சருக்காக வக்காலத்து வாங்கும் பார்த்திபனின் பேச்சு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருந்தது. பிரகிடா பேசியதற்கு நானும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் அனைவரும் மன்னித்து விடுங்கள் என்று அவருக்கு ஆதரவாக இவர் பேசினார். இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கே கதை வேற மாதிரி போகும் போல என்று சமூக வலைத்தளங்களில் பலரும் இதைப் பற்றி பேசி வருகின்றனர்

மேலும் படிக்க : நடிகர் வில்லங்க விசாலின் சக்ரா படம் டிரெயிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *