900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
மாவட்டம்:-தஞ்சாவூர்
ஊர்:- தாராசுரம்
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
சுவாமி : ஐராவதேஸ்வரர்
அம்பாள் : வேத நாயகி
தல விருட்சம் : வில்வ மரம்
திருக்கோயில் சிறப்புகள் :-
இரண்டாம் ராஜராஜனால் 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இத்திருக்கோயில். இத்திருக்கோயிலை சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்கள், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்கள் தேர் போன்று வடிவிலமைந்த மண்டபம் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புகளை இத்திருக்கோயில் கொண்டுள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
மேலும் படிக்க : அவந்தி… உஜ்ஜயினி…மஹாகாளரேஷ்வரம்…
நுழைவாயில் நந்தி அருக அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிக்கட்டுகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள் தட்டும்போது சரிகமபதநீ என்ற சரங்களைக் கொடுக்கிறது. சிற்பிகளின் கனவு என்று கருதப்படும் இத்தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. யுனெஸ்கோா அமைப்பால் இத்திருக்கோயில் உலக பாரம்பரிய சின்னாமக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோயில் குறித்து “தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்)” என்ற நூலை முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ளார்
நன்றி:- இந்து சமய அறநிலையத்துறை