ஐபிஎல் ஆரம்பம் ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம்!
டிக்கெட் ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தியை கிடைச்சிருச்சு ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கொரோனா ஊரடங்கு காரணமாக நடக்காமல் இருந்தது. இதனை அடுத்து டி20 கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க இருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. டி20 கிரிக்கெட் போட்டி நவம்பர் 10 தேதியுடன் முடிவடைகின்றது. டி20 கிரிக்கெட் போட்டி இந்த முறை துபாயில் நடைபெறுகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.
இரவு 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ஐபிஎல் நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. அப்போது ஐபிஎல் விளையாடுவது குறித்து அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. மேலும் நவம்பர் 10ஆம் தேதியுடன் துபாயில் இந்தப் போட்டியானது முடிவுறும் என்று தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நவம்பர் 10ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் அது குறித்த முழு அட்டவணையும் இன்று கிடைக்கப் பெறலாம் என்று தகவல்கள் கிடைக்கின்றன. போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது துபாயில் தொடக்க நாள் அன்று போட்டி மட்டும் மாலை மூன்று முப்பது மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய், அபுதாபி, சார்ஜா போன்ற நாடுகளில் இந்தப் போட்டிகள் நடைபெறும் என்று தகவல்கள் கிடைக்கின்றன.
ஐபிஎல் அணியில் ஒவ்வொரு அணிக்கும் 24 பேர் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். வழக்கத்தைவிட இது அதிகமாக இருக்கிறது மேலும் இந்தப் போட்டியில் கொரோனா தொடர்பான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தெளிவாகச் செய்யப்பட வேண்டும், என்று வலியுறுத்தப்படுத்தப் பட்டுள்ளது.
வீரர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களின் உடல் நிலை சரியாக இருக்க அவர்களுக்கான தக்க நடவடிக்கை களும் விளக்கப்படுகின்றது. ஐபிஎல் போட்டியை இந்திய அணி முன்னுதாரணமாக எடுத்துச் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் ஆண்டு இறுதியில் நடைபெறும் போட்டியை வெல்லலாம் என்று தகவல்கள் கிடைக்கின்றது, பார்ப்போம் என்ன நடக்கிறது என்று பக்குவமாக விளையாடுங்கள் அப்போதுதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை வெல்ல ஐபிஎல் போட்டிகளை வீரர்கள் பயிற்சிப் போட்டியாகப் பயன்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும்.