சினிமாவிளையாட்டு

கெத்தான சிஎஸ்கே தல தோனியோட மாஸ் லுக்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு சந்தா கட்டிடிங்களா! ஏன்னு யோசிக்கிறீங்களா! ஐபிஎல் டி20 வர சனிக்கிழமை 19ம் தேதியிலிருந்து தொடங்குதுங்க.

சென்னை ஊரு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
தோனி தல!

இதெல்லாமே வெறும் வார்த்தைகள்  மட்டும் இல்லங்க ஏமோஷன். என்ன மக்களே சரிதானே!

ஐபிஎல் டி20 2020

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில வருஷங்கள் பேன் செய்யப்பட்டு வெவ்வேறு அணி பெயர்களில் இந்த அணியின் விரர்கள் விளையாடுவது பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் இந்திய அணி வீரர்களுக்காக போட்டியை பார்த்தனர். ஆனாலும் மஞ்சள் பனியனுக்கு இருக்கும் பவுசே தனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற பனியன் அணிந்த விளையாட்டு வீரர் வெளி நாட்டவராக இருந்தாலும் நம்மவராக கருதப்பட்டு குரல் எழுப்பும் ரசிகர்களை பார்த்தாலே ரசிக்கத் தோன்றும்.

2020 பல எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்டாலும் பல ஏமாற்றங்களுடன் நடந்து கொண்டிருக்கிறது. தல மகேந்திர சிங் தோனியின் ஓய்வுபெறும் செய்தி அதனைத் தொடர்ந்து சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் ஓய்வுபெறும் செய்தி. இவர்களை நீல நிற பனியனில் இனி பார்க்க முடியாத என்ற ஏக்கம் இருந்தாலும் மஞ்சள்நிற பனியனில் பார்ப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. தற்போதும் சுரேஷ் ரெய்னா ஆடப் போவது இல்லை என்பது மீண்டும் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

ஐபிஎல் டி20 மட்டும் ஏமாற்றம் கொடுக்காமல் சற்று தாமதமாக நிகழ்ந்தாலும்; நிகழ்ந்தாலே போதும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் நடக்கவில்லை என்றாலும் எங்கோ நடக்கிறதே என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.

19 செப்டம்பர் 2020 வரும் சனிக்கிழமை‌ ஐபிஎல் டி20 போட்டிகள் துவங்குகிறது. முதல் டி20 சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இடையிலான போட்டி. தி எண்த் நாட் என்னும் யூடியூப் சேனலில் மீண்டும் வேண்டும் தோனி என்ற காணொளி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கவர் இட் அப் என்ற யூடியூப் சேனலில் இயக்குனர் வெங்கட் பிரபு குரல் கொடுக்க எங்க சிஎஸ்கே எங்க கெத்து என்ற தலைப்பில் அருமையாக கதை சொல்லுவது போல் படங்கள் சித்தரிக்கப்பட்டு தல டோனி சூப்பராக மாஸாக காட்சியளிக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது அணியின் பெயராக இருந்தாலும் தமிழகம் முழுவதும் ஆதரிக்கும் அணியாக விளங்குகிறது. சிஎஸ்கே-விற்கான போட்டிகளின் விவரங்கள் இதோ.

கிரிக்கெட் போட்டியை நேரலையாக காண டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கட்ட பல இளைஞர்கள் திட்டமிட்டு இருப்பார்கள்; அவர்களுக்கு நாங்கள் நினைவுபடுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தொலைக்காட்சி கணினி என எதற்குமே பயன்பாடு இல்லாமல் அனைத்தையுமே ஓரம் கட்டி வைத்து விட்டு கைப்பேசி நம்மை முழுமையாக ஆக்கிரமித்து விட்டது. எதுவுமே அளவோடு இருப்பதே நன்று.

மக்களே கிரிக்கெட் சீசன் வந்துவிட்டது அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள்ளேயே இருங்கள். கொரோனா பரவலையாவது தடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *