விளையாட்டு

ஐபிஎல் 2020 ‘சிங்கத்தின் வெற்றி’ தொடரும்

இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் 2020 தொடரில், 18ஆவது ஆட்டத்தில் சென்னை அணியும் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளனர். இதனால் சீரான ஸ்கோர் சேர்த்து வந்தனர். இருப்பினும் சென்னை பவுலர்கள் துள்ளியமாக பந்தை வீசியதில் மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி நல்ல பவுலிங் கொடுத்தனர்.

பஞ்சாப் அணி : 178 ரன்

இருப்பினும் இறுதியாக பஞ்சாப் அணி வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தால் 178 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் அதிகபட்சமாக 63 ரன்களை எடுத்துள்ளார். இந்த தொடரில் சென்னை அணி மும்பையை வென்று அடுத்து வந்த மூன்று போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்தது.

அதனால் இப்போட்டியில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்திலும் அணி வீரர்கள், தங்களுடைய பங்களிப்பை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆதலால் இப்போட்டியை ரசிகர்கள் மட்டுமின்றி சென்னை அணியும் தங்களது வெற்றிப் பாதையை தொடக்க பலப்பரிட்சை மேற்கொண்டது.

தோனியும் முந்தைய போட்டியின் தோல்விகளுக்கு துவக்க வீரர்கள் சரியாக கொடுக்காததால், பின்வரிசை ஆட்டக்காரர்கள் அடித்து ஆட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு ஆட்டத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. இதனால் இன்றைய போட்டியில் ஃபாம் இல்லாமல் தவித்த வாட்சனும் மிகவும் சிறப்பாக ஆடினார்.

ஐபிஎல் 2020 : டு ப்ளஸி

ஏற்கனவே நன்றாக ஆடிக்கொண்டிருந்த டு ப்ளஸி அவருக்கு துணை நின்று நன்றாக ஆடியதால் சென்னை அணி ஐபிஎல் 2020 இல் மீண்டும் தன் வெற்றிப் பாதையை துவங்கியுள்ளது. மேலும் இன்று நம்பமுடியாத அளவுக்கு வெகு நாட்கள் கழித்து சிஎஸ்கே அணி பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக உள்ளது.

ரசிகர்களை உற்சாகத்தில்

அதுமட்டுமின்றி பத்து ஓவர்களுக்கு நூறு என்றும், தனது பேட்டிங் வரிசையில் சிறப்பாக ஆடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெற்றியை சிஎஸ்கே ரசிகர்களும் ரஜினியின் படத்தில் வரும் ஒரு வசனத்தை போல, ‘நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்று சொல்வது போல் சிஎஸ்கே அணி தனது அபார வெற்றியை இந்த தொடரில் துவக்கியுள்ளது. இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

சென்னை : 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி

போட்டியின் இறுதியில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 17.4 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் “திரும்பி வந்தால் இப்படி வரணும்” என்பது போல் தனது ஆக்ரோஷமான வெற்றியை வெளிப்படுத்தியுள்ளது. வாட்சனும், டுப்ளஸிஸ் அபாரமாக ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ளும் அளவிற்கு பஞ்சாப் அவர்களை வெளுத்து வாங்கினர்.

சென்னை அணியின் நம்பிக்கை

மேலும் தோனி தனது சக வீரர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் இப்போட்டியின் மூலம் நாம் காணமுடிகிறது. ஏனென்றால் சமூக வலைதளங்களில் வீரர்களை மாற்றியிருக்கலாம் என்று பலவாறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், தோனி தனது அதே டீமை வைத்து இந்த போட்டியில் வெற்றி பெற வைத்துள்ளது.

வெற்றி பெற வைத்தது. அனைவரின் கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தோனி டீம் மீதும், டீம் திறமை மீது உள்ள நம்பிக்கையை உணர்த்துகிறது. இதுவே சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *