விளையாட்டு

போட்டி போடும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்சிப்

பொருள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீராத்தில் ஆரம்பமாகவுள்ள நடப்பு சீசனுக்கான புதிய டைட்டில் ஸ்பான்சராக விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நேற்று அறிவித்தது பிசிசிஐ நிறுவனம். புதிய டைட்டில் ஸ்பான்சராக உரிமம் ஆகஸ்ட் 18 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா.

மேலும் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளையும் அறிவித்தார். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே ஏற்பட்ட எல்லைப் பிரச்சினையை தொடர்ந்து சீன மொபைல் நிறுவனமான விவோ உடன் ஏற்படுத்தப்பட்டிருந்த ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்கான ஒப்பந்தத்தை முறித்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் எடுப்பதற்கு பதஞ்சலி நிறுவனம் பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் பதஞ்சலி பிராண்டுகளுக்கான உலகளாவிய மார்க்கெட்டிங் தளத்தை ஏற்படுத்த விரும்புவதாக பதஞ்சலி செய்தி தொடர்பாளர் எஸ்கே.திஜராவாலா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பிசிசிஐ பிராண்ட் மார்கெட்டிங் கோரிக்கையை வைக்க பதஞ்சளி பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். பதஞ்சளி ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்தால் ஐபிஎல் ஐ விட அதிக நன்மை கிடைக்கும். பிராண்டுகளுக்கு இடையில் போட்டி இருக்கும் என்றாலும், பதஞ்சலி டைட்டில் ஸ்பான்சர் சீனாவுக்கு எதிரான மனநிலை நிலவுவதால், தேசியவாத கண்ணோட்டத்தில் சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் பிராண்டுகளுக்கு காண யுக்தி நிபுணரான ஹரிஷ் பிஜீர் குறிப்பிட்டார்.

ஐபிஎல் 2020 விவோ டைட்டில் ஸ்பான்சராக இருக்காது என்பதை ஆகஸ்ட் 6ஆம் தேதி பிசிசிஐ உறுதிப்படுத்தியது. எனினும் அடுத்த ஆண்டின் முக்கிய ஸ்பான்சராக போயிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றன. புதிய ஸ்பான்சர் இடமிருந்து பிபிசி ஐ அதிகபட்சமாக 300 கோடி வருமானம் ஈட்ட கூடுமென்று moneycontrol.com தெரிவித்தன. இந்த ஆண்டின் ஐபிஎல் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *