SRH vs RCB ஆட்டத்தை மாற்றிய தருணங்கள்
ஐபிஎல் தொடர்களை பொருத்தவரை அதிகப்படியான தோல்விகளை சந்தித்து வந்த அணியில் முக்கியமானது பெங்களூர் அணி தான். அந்த அணியின் வரலாறு அப்படி சோகமானதாக இருக்கையில், நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளன.
ஐபிஎல் போட்டிகளில் 150, 200 ரன்கள் என்பது மிகவும் எளிதாக அடிக்க கூடியதாக இருந்த காலம் போய், தற்போது 160 ரன்கள் எடுத்தாலும் எதிரணியை வீழ்த்த முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த போட்டி உறுதி செய்துள்ளன.
ஐபிஎல் போட்டிகள் என்றாலே பரபரப்புக்கும் திருப்புமுனைகளுக்கும் பஞ்சமே இருக்காது. ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே துபாயில் நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியிலும் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய பல்வேறு திருப்புமுனைகள் இருந்தன.
பெங்களூரு அணி அசத்தல் வெற்றி பெற்ற இந்தப் போட்டியின் சிறந்த தருணங்கள் இவை என்று சொல்லலாம். பெங்களூரு அணி வெற்றி பெறுவதற்கு சாகல் எடுத்த விக்கெட்டுகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டம் என்னதான் பட்டிக்கலும், ஃபின்சும் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தைக் கொடுத்து இருந்தாலும் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் தடுமாறும் நிலைக்கு சென்று விட்டன.