செய்திகள்

இளைஞர்களுக்கு வாய்ப்பு:- இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) 626 டெக்னிக்கல் மற்றும் டெக்னிகல் அல்லாத அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) 626 தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பயிற்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15, 2022. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான iocl.com மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி: அப்ரண்டிஸ்

காலியிடங்களின் எண்ணிக்கை: 626

தகுதி : டிரேட் அப்ரெண்டிஸ்: விண்ணப்பதாரர் NCVT / SCVT ஆல் அங்கீகரிக்கப்பட்ட தொடர்புடைய துறைகளில் ITI உடன் படித்திருக்க வேண்டும்.

டெக்னீஷியன் அப்ரெண்டிஸ்: விண்ணப்பதாரர் பொறியியல் சம்பந்தப்பட்ட துறைகளில் மூன்றாண்டு முழுநேர டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

டிரேட் அப்ரண்டிஸ் (கணக்காளர்): விண்ணப்பதாரர் ஒரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் முழுநேர இளங்கலை பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகம்.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்னப்பிக்கும் முறை:- ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜனவரி 31, 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *