கல்விவேலைவாய்ப்புகள்

இண்டர்வியூ டிப்ஸ் வேலை தேடுவோர்க்கு

வேலைவாய்ப்பு பெற நம்மை நாம் அப்டேட் செய்து கொள்வது மிகவும் அவசியம் ஆகின்றது. எந்த அளவுக்கு திறன் படைத்தது உள்ளமோ அந்த அளவுக்கு ஸ்பாண்டினட்டி என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. சிக்கல்களை திறமையாக கையாளுதல் என்பது அவசியமாக இருக்கின்றது.

நீங்கள் எந்த துறையில் வேலையை தேடினாலும் உங்களுக்கு என்று தனித்துவம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகின்றது. மேலும் உலகில் உங்களை தரமாக தயாரித்து கொள்ள வேண்டியது என்பது மிகவும் அவசியமாகும்.

நீங்கள் இன்டர்வியூ செல்லும்போது உற்சாகத்துடன் இருக்கவேண்டியது மிகவும் நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும். எத்தனை போட்டிகள் இருந்தாலும் உங்களுக்கு என்று இருக்கும் உண்மையான திறன் ஸ்மர்ட்னஸ் ஆகியவை எப்போதும் உங்களை ஜொலிக்க செய்யும்.

அப்டேட் செய்யுங்கள்:

வேலைவாய்ப்பு என்பது நம்முடைய வாழ்க்கை வரும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. நாம் படித்த படிப்புக்கும் திறமைக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு பெறுவதில் நாம் முழு கவனம் செலுத்தி வருகின்றோம். அதன்படி நாம் நம்முடைய முக்கியமான பணியினை செய்தே ஆக வேண்டும்.

அந்த வகையில் நம்முடைய தாழ்வு மனப்பான்மை என்பதை விட்டு விட்டு தெரிந்தவற்றை அப்டேட் செய்து கொள்வது மிகச் சிறப்பாகும். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சோதனைகளையும் கடக்க வேண்டியது நம்முடைய முக்கிய பணியாகும்.

வேலைவாய்ப்பு என்பது நம்முடைய வாழ்க்கை வரும் முக்கியமாகக் கருதப்படுகின்றது நாம் படித்த படிப்புக்கும் திறமைக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு பெறுவதில் நாம் முழு கவனம் செலுத்தி வருகின்றோம். அதன்படி நாம் நம்முடைய முக்கியமான பணியினை செய்தே ஆக வேண்டும்.

அந்த வகையில் நம்முடைய தாழ்வு மனப்பான்மை என்பதை விட்டு விட்டு தெரிந்தவற்றை அப்டேட் செய்து கொள்வது மிக சிறப்பாகும். தெரியாதவற்றை தெளிவாக ஒத்துக் கொள்ளுங்கள், வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சோதனைகளையும் சாதனையாக்க வேண்டியது நம்முடைய முக்கிய பணியாகும்.

ஆடை அணிதலில் தெளிவு:

பொருத்தமான ஆடைகள் அணிவது என்பது மிகவும் அவசியமாகின்றது கையில் வாட்ச், செயின், மோதிரம், இது போன்ற அணிகலன்கள் அணியும்போது நேரடி தேர்வைப் பொருத்த வரைக்கும் எளிமையாக இருப்பது நல்லது.

கண்களை உறுத்தாத காம்பினேசன் அவசியம் தேவை . நாம் முழுமையாக புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் கால்கள், கைகள், நகங்கள் சுத்தமாக வைத்து அழகாக மெருகூட்ட வேண்டும்.

பேசும் மொழியில் எளிமை:

நேர்காணலில் இருக்கும்போது கேள்வி கேட்பவரின் கேள்வியை நன்றாக கவனித்து அதற்கான தக்க பதிலை சொல்ல வேண்டும் மேலும் நேர்காணலில் அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும் தேவைப்படும் இடத்தில் பேசாமல் இருக்கக்கூடாது. அதற்காக அதிகம் பேசவும் கூடாது.

தேர்வர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை முறையாக அறிவிக்க வேண்டியது அவசியம், பேசும்போதும் கவனம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகின்றது. ஆங்கில மொழி எளிமை போதும், மொழிப் புலமையை உளறுவதை கண்டபடி நிறுத்தவேண்டும்.

நேர்காணலை பொருத்தவரை தி பாடி லாங்குவேஜ் என அழைக்கப்படும் உடல்மொழி என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் பதிலில் எப்படி கவனம் செலுத்துதல், அதுபோல வேலை பார்த்த நிறுவனம். அந்த நிறுவனத்தின் முக்கிய பண்புகள் ஆகியவற்றை விளக்கும் பொழுது உங்களுடைய பதிலில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.

தேவையற்ற படங்கள் தவிர்த்தல் சிறப்பு கேள்விக்கான பதிலை சிறப்பாக எழுத வேண்டியது என்பது மிகவும் அவசியம் ஆகின்றது. முகபாவனைகள் ஆகியவை முறையாக இருக்க வேண்டியது உங்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தும்.

எப்போதும் நேர்காணலுக்கு முன் பயிற்சி என்பது மிகவும் அவசியம் கேள்விகளுக்கான பதிலை முன்னரே தயார் செய்து கொள்ளவும். நீங்கள் தயார் செய்த கேள்விகளுக்கான பதில்கள் தான் நீங்கள் கொடுக்க வேண்டுமென்பதில்லை.

ஆனால் பயிற்சி செய்த பதில்கள் கச்சிதமாக உங்களை வெளிப்படுத்தும் நிறுவனம் பற்றிய அறிவிப்பு அவற்றில் உங்கள் பங்காற்றல் எப்படி இருக்கும். உங்களுடைய அனுபவம் இவற்றை முறைப்படுத்தி தெரிவித்தல் போதுமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *