கல்விசெய்திகள்தமிழகம்

ஆன்லைன் வகுப்புகளால் ஏற்படும் இடர்பாடுகள்

இந்திய மக்களின் வருமான நிலவரத்தை பார்த்தால் சமீபத்திய ஆய்வில் இந்தியாவில் 56 சதவீத குழந்தைகளிடம் ஸ்மார்ட் போன்கள் இல்லை என்று தெரியவந்துள்ளன. ஸ்மார்ட் போன்களின் தடம் அவற்றின் விலையை பொறுத்து மாறுபடுகின்றன. ஆயிரம் ரூபாயிலிருந்து வாங்கலாம் என்றாலும் குறைந்த விலை போன் தரம் எல்லோருக்கும் தெரியும்.

பத்தாயிரம் ரூபாய்க்கு நல்ல போன் ஒன்றை வாங்கி விட்டோம் என்றால் அதோடு முடியாது. இதற்கு டேட்டா பேக் வேண்டும். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா தேவையென்றால் மாதம் 250 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். கல்வித் துறையின் பரிந்துரைப்படி உயர்நிலை வகுப்புகளுக்கு 3 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம்.

இதற்கு ஒரு ஜிபி டேட்டா போதுமா? வகுப்புகள் முடிந்ததும் குறிப்புகளும், வாட்ஸ்அப் மூலம் பகிரப்படுகின்றன. பிறகு குழந்தைகள் டெஸ்ட் அல்லது அசைன்மென்ட்களை எழுதி ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும். வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் நேரத்தில் பொழுதுபோக்க குழந்தைகள் இணையத்தை நாடுகிறார்கள். நட்புகளுடன் அரட்டை மேலும் புழங்கும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், சினிமா தளங்கள் என எல்லாவற்றையும் பார்க்க ஒரு ஜிபி டேட்டா எப்படி பத்தும்.

பல வீடுகளில் இரண்டு குழந்தைகளும் வகுப்புகளில் கலந்து கொண்டு இருக்கின்றன. வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி விலை உயர்ந்த லேப்டாப்பை வாங்கினாலும், இந்த வசதி எத்தனை குடும்பங்களால் உடனே வாங்க முடியும். பேஸ்புக், வாட்ஸ் அப் என்று ஸ்மார்ட்போனில் தொடர்ச்சியாக இணையத்தை பார்ப்பதால் சிலரின் மூக்கு கண்ணாடியின் பவர் அதிகமாவதை மறுக்க முடியாது.

இதற்காகவே லேப்டாப்பை வாங்கும் சூழ்நிலை உருவாகிறது. கூடுதல் செலவாக இவற்றை செய்ய பணத்துக்கு எங்கே போவது. வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளையும் படிக்க வைக்க வருடத்துக்கு 1 லட்ச ரூபாய் செலவு செய்வதாக சொல்கிறார்.

குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்குள் தான் இக்காலத்தில் கணவன், மனைவி இருவருக்கும் வேலை இல்லை கிடைக்கும் சொற்ப காசில் அரிசி, பருப்பு வாங்குவார்களா? ஸ்மார்ட்போன், கணினியையும் வாங்குவார்களா சிந்திக்க வேண்டும் அல்லவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *