பளபள முகத்திற்கு வெறும் 10 நிமிஷம் போதும்…அதுவும் வீட்டிலேயே
அழகு என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பிடித்த ஒன்று .அதிலும் பெண்கள் என்றாலே அழகு என்று தான் நம் நினைவுக்கு வரும்.இப்பொழுது உள்ள பெண்களுக்கு வீட்டில் இருப்பதை விட வெளியில் அலைந்து திரிந்து வேலைக்கு செல்வதற்கு நேரம் சரியாக உள்ளது. வீட்டையும் பார்த்து வேலையையும் பார்த்து தனது குடும்பத்தில் உள்ளவர்களை பார்க்கவே நேரம் இல்லாத பொழுது தன்னை பார்க்கவும் தனது அழகை கவனித்துக் கொள்ளவும் எப்படி நேரமிருக்கும்..
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். நீங்கள் காலையில் பரபரப்பாக வேலைக்கு கிளம்பும்போது கூட இதனை எளிதில் செய்யலாம். மேலும் விசேஷங்களுக்கு செல்லும் பொழுது நமது முகம் மட்டும் எப்படி இருக்கிறது என்று கவலையும் இனி வேண்டாம். அதற்கான ஒரு அழகிய தீர்வை தற்போது பார்க்கலாம்.
முகம் பளபளக்க செய்ய வேண்டியவை
ஒரு சிறிய bowl லில் 🥣 சிறிதளவு தூய்மையான சர்க்கரை மற்றும் கல்ல மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். பின்பு அதில் ஒரு மூன்று துறை அளவு எலுமிச்சை சாறு விட்டுக் கொள்ளவும். பின்பு ஒரு தக்காளியை இரண்டு துண்டாக வெட்டி முதலில் ஒரு பாதி தக்காளியை எடுத்து நாம் ஏற்கெனவே கலக்கி வைத்த சர்க்கரை, கடலை மாவு கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக தொட்டு உங்களது முகத்தில் மசாஜ் செய்வது போல தேய்த்துக் கொள்ளவும்.
இதில் உள்ள தக்காளி சாறு முடிந்த பின்பு மீண்டும் மீதமுள்ள ஒரு பகுதி தக்காளி துண்டை எடுத்து இதேபோல் நன்றாக தேய்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்பு ஒரு ஐந்து நிமிடம் இருந்தால் போதும் பின்பு நீங்கள் முகத்தை குளிர்ச்சியான தண்ணீர் அல்லது சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும் அவ்வளவுதான் உங்கள் நான் எவ்வளவு பளபளப்பாக உள்ளது என்பதை நீங்களே உணர்வீர்கள்., எளிதான இந்த முறையை பயன்படுத்தி உங்கள் அழகுக்கு அழகு சேர்த்து மகிழுங்கள்…