டிக் டாக் இடத்தை நிரப்ப ரிலீஸ் என்ற வசதியை இன்ஸ்டாகிராம் களம் இறக்கியது
இன்ஸ்டாவில் ரீல்ஸ் என்ற வசதி மூலம் 15 வினாடிகள் சிறிய வீடியோக்களை பதிவு செய்து ஷேர் செய்யும் வசதியை கொண்டுள்ளது. நேரடியாக இதனை அவரவர்களின் இன்ஸ்டாவில் ஷேர் செய்யலாம்.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் அம்சத்தின் மூலம் பயனர்கள் டிக் டாக் போன்ற 15 வினாடி வீடியோக்களை உருவாக்க முடியும். வீடியோவின் பின்னணியை மாற்ற முடியும். டிக் டாக் போன்ற வீடியோவின் வேகத்தை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.
டிக் டாக் லாக் டூயட் அம்சம் பயனர்களுக்கு கிடைக்கும். முழு வீடியோவையும் உருவாக்கிய பிறகு பயனர்கள் அதை தங்கள் இன்ஸ்டாகிராம் கதைகளில் பகிர முடியும். இது தவிர பயனர்கள் இந்த வீடியோவை தங்கள் நண்பர்களுக்கு நேரடியாக அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாவில் இந்த புதிய வசதி, டிக் டாக் ரசிகர்களுக்கு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும், என இணையத்தில் பலரும் பதிவிட்டு உள்ளனர்.
களம் இறங்கிய இன்ஸ்டாகிராம்.. டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி?
டிக் டாக் இடத்தை நிரப்ப ரிலீஸ் என்ற வசதியை இன்ஸ்டாகிராம் களம் இறக்கியது குறிப்பிடத்தக்கது. இந்திய சீன லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனைகளை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு கருதி டிக் டாக் யூசி பிரௌசர் ஷேர்இட் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்திருந்தது.
இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்புகள் வந்தாலும் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த வருமானம் ஈட்டிய பலர் வருத்தம் அடைந்தனர்.
நூற்றி முப்பது கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் சினிமா, டிவி நிகழ்ச்சியின் மூலம் ஒரு நபர் பிரபலமடைய வேண்டும் என்பது சாதாரண விஷயம் அல்ல.
ஆனால் இந்த எண்ணத்தை எளிதில் புரட்டிப்போட்டது சமூக வலைத்தளங்கள் போன்ற செயலிகள். சாமானியர்களும் பிரபலம் அடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்குள் இருக்கும் கலைஞனை வெளிக்கொண்டுவர.
டிக்டாக்கில் பொழுதை கழித்தவர்களும் டிக் டாக் மூலம் பிரபலமானவர் தற்போது என்ன செய்யலாமென செய்வதறியாமல் உள்ளனர்.
தேங்கி நிற்கும் இந்தியச் சந்தையில் எப்படியாவது புகுந்துவிட வேண்டும் என பல செயலிகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நேரங்களில் சமூகவலைத்தள ஜாம்பவான் பேஸ்புக் தன்னுடைய நிறுவனமான இன்ஸ்டா மூலம் புது வசதியை டிக் டாக் இடத்தில் நிரப்ப களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.