சினிமாசெய்திகள்

பிறந்த நாளைக் கொண்டாடாத துக்கத்தில் இன்ஸ்டாகிராம்

பத்து வருடங்கள் வெற்றிப் பயணத்தை மேற்கொண்ட இன்ஸ்டாகிராம் இந்த மாதம் பிறந்த நாள் கொண்டாடியது. அதனை யாரும் கொண்டாடவில்லை என்று வருத்தத்தில் இருக்கின்றது.

  • 6 அக்டோபர் 2010 இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளமாக சமுதாயத்தில் வந்தது.
  • இயக்குனர் விக்னேஷ் சிவனுணக்கு இன்ஸ்டாகிராம் தந்த பரிசு.
  • நெட்டிசன்களால் கலாய்கப்படும் இன்ஸ்டாகிராம்.
  • அப்போ ஐஜி டிவி வேறயா!

இன்ஸ்டாகிராம்

2010 செப்டம்பர் மாதம் இறுதியில் சமூகத்தில் வெளியான இன்ஸ்டாகிராம் எட்டு நாட்களுக்குப் பிறகு 6 அக்டோபர் அதிகார பூர்வமாக வெளியானது. ஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்படும் சமூக வலைத் தளமாக இருக்கும் இன்ஸ்டாகிராம் மக்களிடையே பெரிதாக வரவேற்கப்பட்டது.

விக்னேஷ் சிவன்

8 அக்டோபர் 2020 இன்ஸ்டாகிராம் விக்னேஷ் சிவனுக்கு பார்சல் அனுப்பி வைத்தது. இன்ஸ்டாகிராம் வாழ்த்தும் வகையிலும் அது தந்த பரிசிற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அந்தப் பரிசினை பிரிக்கும் காணொளியை பதிவிட்டு மக்களுடன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பரிசா!

எண் 10 வடிவில் பலூன் அதனைத் தொடர்ந்து இரு கார்டுகள் அடியில் இருந்தது மாபெரும் ஆச்சர்யம். உடனே புகைப்படம் தரும் புகைப்படக் கருவி.

மேலும் படிக்க : இன்ஸ்டாகிராமுக்கு என்ட்ரி கொடுத்த மலையாள நடிகை..!

நெட்டிசன்கள்

மக்களின் மத்தியில் பிரபலங்கள் அனைவரின் பிறந்த நாளையும் கொண்டாடும் நிலைமை நிலவி வர, ஃபேஸ்புக் என்ற தளம் நம் நண்பர்களின் பிறந்த நாளை நினைவூட்டும் விதமாக இருக்கும் பொழுது இன்ஸ்டாகிராம் என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வில்லையே!

ஐஜி டிவி

இன்ஸ்டாகிராமில் இருக்கும் காணொளி பகிரும் தளமான ஐஜி டிவி 2018 ல் வெளியானது. பொதுவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை உள்ள காணொளிகளை பதிவிடலாம் அதற்கு மேற்பட்ட காணொளிகள் ஐஜி டிவி மூலமாக இன்ஸ்டாகிராமில் பகிர்கிறோம்.

மேலும் படிக்க : டிக் டாக் இடத்தை நிரப்ப ரிலீஸ் என்ற வசதியை இன்ஸ்டாகிராம் களம் இறக்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *