செய்திகள்தேசியம்

கொழுப்பு எடுத்த மனிதம் கொட்டம் எடுத்து ஆடுகின்றது

மனதை பதற வைக்கும் சம்பவம்… பாலக்காட்டில் ஓர் யானையின் இறப்பு… இறக்கம் கருணை எதுவும் இல்லாத மனிதர்கள் இருந்தால் என்ன, இறந்தால் என்ன என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது.

மனிதனை பலாத்காரம் செய்யும் இந்த உலகில் மிருகங்களையும் விட்டு வைக்காமல் துன்புறுத்துவது, மனதை துன்புறுத்துகிறது. துப்புகெட்ட மனிதத்தினை தூர்வார வேண்டும்.

“காட்டு யானை உணவைத் தேடி தன் இருப்பிடமான அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை விட்டு எந்தவித துன்புறுத்தலும் இல்லாமல் பாலக்காட்டு ஊர் பகுதியில் வலம் வந்து இருந்தது. அந்த யானைக்கு அம்மக்கள் ஒரு அன்னாசிப்பழத்தை கொடுத்துள்ளனர். அதை அது உண்டது. உண்டபின்தான் அதில் பட்டாசு இருப்பது தெரியவந்தது வாய்ப்பகுதி எரிய என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்தது. 

ஐயகோ மனிதம் கெட்ட ஆன்மா இருந்தால் கொரானா என்ன கொள்ளைக நோய்கள் பல வரும் பூமிகள் இரண்டாய் போகச் சொல்லி செய்யும், இவ்வளவு மதம் கொண்ட மனிதம் இருந்தும் மதம் கொள்ளாமல் இருந்த கர்பிணி பெண் யானையின் கருணை என்ன சொல்ல வார்த்தை இல்லை.

தனக்கு ஆபத்து வந்தபிறகும் அம்மக்களை எந்தவித பாதிப்பும் இன்றி அங்கும் இங்கும் அலைந்து தன் வலியை எவ்வாறு போக்கிக் கொள்வது என தேடியது ஒரு பெண் கர்ப்பிணி யானை அது திரும்ப தாக்கவில்லை அதுதான் உயிரின் அடிப்படை. பின் ஆற்றிற்கு விரைந்து சென்று தண்ணீரில் தந்தத்தையும் வாயையும் வைத்து அந்தப் புண்ணை குளிர் அடையச் செய்தது.

ஐயகோ இந்த மனிதம் கெட்ட மானுடம் என்னை வதைக்கின்றதே இருப்பினும் வாழ்க வாழக வளமுடன் என்று தன்னை நிந்தித்து இந்த தருதலைகள் திருப்பி தாக்கவில்லை தந்தம் கொண்ட யானை

ஆற்று தண்ணீரில் இருந்த அந்த யானையை நாங்கள் மற்ற இரு யானைகளை கொண்டு மீட்டெடுக்க பெரும் பாடு பட்டோம் ஆனால் அந்த யானையோ எங்களை நெருங்க விடவில்லை.

உயிர்களை வதைக்காமல் தன் உயிரைவிட்ட பெண் அசுவம்:

கடும் துன்பம் அடைந்து சித்திரவதையை தாங்கிக் கொள்ள முடியாமல் பாடுபட்டு உயிர்விட்டது அந்த யானை. நாங்கள் அதனை தண்ணீரில் இருந்து மீட்டு எடுத்து பிரேத பரிசோதனை மருத்துவரால் செய்யப்படது. அது ஒரு பெண் யானை என்றும் அது ஒரு உயிர் அல்ல இரண்டு உயிராக இருந்த நிலையில் உயிரை விட்டுள்ளது எனவும் தெரிந்தது. 18 லிருந்து 24 மாதங்களில் குட்டியை ஈன்றெடுக்கும் நிலையில் இருந்தது. இதை சொன்ன மருத்துவர் உட்பட அனைவரும் கண் கலங்கினர். பின் இறுதி சடங்குகளை அது விளையாடித் திரிந்த அந்த பூங்காவில் செய்து முடித்தோம்.” என்று வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் அவர்கள் கூறினார்.

அடிபட்ட அந்த மிருகத்திற்கு இருக்கும் தாய் உணர்வு கூட மக்களிடையே இல்லாமல் கொடூரத் தனமாக நடந்து இருக்கும் சமுதாயத்தில் நாம் வாழ்க்கையில் நம் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம் என்று யோசிக்க வைக்கிறது. அந்த தாய் உள்ளம் படைத்த யானையிற்காக அனைவரும் மௌன அஞ்சலி செலுத்துவோமாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *