உடலை டீடாக்ஸ் செய்ய முக்கிய குறிப்புகள்…!
நாம் அன்றாட வாழ்வில் சாப்பிடும் உணவில் ஆரோக்கியம் நிறைந்துள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா..? நீங்கள் அப்படி நினைத்தீர்கள் என்றால் அது நிச்சயமாக தவறு. நாம் சாப்பிடும் உணவில் நச்சுக்கள் நமக்குத் தெரியாமலே நிறைந்திருக்கிறது. அந்த நச்சுக்களை வெளியேற்றுவதற்கான தீர்வு தான் டீடாக்ஸ் செய்கிறோம். உண்மையில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை போக்குவதே டீடாக்ஸ்.
நம் உடல் இயற்கையாகவே கல்லீரல், சிறுநீர் மூலம் கழிவுகளை வெளியேற்றினாலும், ஏற்கெனவே கூறியது போல சுற்றுச்சூழல் காரணமாக அதிகப்படியான டாக்ஸின்கள் நம் உடலில் சேர்கிறது. இது உடலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. டீடாக்ஸ் செய்வதால் நச்சுக்களை மட்டும் நீக்காமல் பல்வேறு நன்மைகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது.
உங்களுக்காக இதோ கொண்டு வந்திருக்கிறேன் உடலை டடீடாக்ஸ் செய்வதற்கான முக்கிய குறிப்புகள்.
- இளநீருடன் எலுமிச்சை சாறு மற்றும் புதினா: உடனடி புத்துணர்ச்சி தரக்கூடிய இந்த டீடாக்ஸ் ட்ரிங்க்ஸை நீங்கள் வீட்டிலேயே செய்துவிடலாம். இளநீர் இயற்கையிலேயே தனக்குள் பல வைட்டமின்கள் மற்றும் மினரல்களைக் கொண்டது. இதில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் உடல் டீஹைட்ரேட் ஆகாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த டீடாக்ஸில் தேவைப்பட்டால், புதினாவுடன் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இளநீர், புதினா, தேன், எலுமிச்சை சேர்ந்து புது வித சுவையை தரும்.
- டீடாக்ஸ் ஹல்தி டீ: இது இயற்கை முறை, இந்த டீடாக்ஸ் ட்ரிங்க்ஸில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்களான மஞ்சள், இஞ்சி, மிளகுடன் தேன் இருப்பதால் உடலுக்கு மிகவும் ஏற்றது. மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்பது நம்மில் பலருக்குத் தெரியும்.
- எலுமிச்சை ஜூஸ் நம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்வதுதான் எலுமிச்சை ஜூஸ் இதில் தேன் அல்லது வெள்ளரிக்காய் சேர்த்து ஜூஸாக குடிக்கலாம்.