வலிமை படத்தில் எடுத்த முக்கியமான முடிவுகள் என்ன?
அஜித்குமாரின் 60வது படம் வலிமை அதிரடி த்ரில்லராக இருக்கப் போகிறது. கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய எச். வினோத் என்பவர் வலிமை படத்தை எழுதி இயக்குகிறார்.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை முடித்த பின்னரே பெரிய பட்ஜெட்டில் படம் இயக்க வேண்டும் என முடிவெடுத்து அஜீத் குமாரை அணுகினார். படத்தின் கதாநாயகனை சித்தரித்த விதம் அஜித் குமாருக்கு அப்பொழுது அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்பதால் அந்த படத்தை நிராகரித்து விட்டார்.
அஜித் குமார், இயக்குனர் எச். வினோத்திற்கு இந்தி படமான பிங்க் படத்தை ரீமேக் செய்யும் பணியில் இறங்குமாறு கேட்டுக்கொண்டார். அதுவே நேர்கொண்டபார்வை படமாக ரிலஸாக இந்த படம் போனிகபூர் தயாரிக்கப்பட்டது.
நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பின்பு போனி கபூரி, எச். வினோத் மற்றும் தல அஜித் குமாருடன் மீண்டும் ஒத்துழைப்பதாக தெரிவித்தார். மெகா பட்ஜெட் கதையை மீண்டும் எச். வினோத் கூற போனி கபூருக்கு படத்தின் வேகத்தை நடிகரின் ஆர்வத்தைப் பயன்படுத்தும் த்ரில்லராக இந்த படம் இருக்கும் எனப் பரிந்துரைக்க அஜீத் குமாரும் கிரீன் சிக்னல் கொடுத்து வலிமை படம் படப்பிடிப்பு தொடங்கியது.
வலிமை படம் வெளிநாட்டில் படம்பிடிக்க வேண்டும் என முடிவெடுத்திருந்த இயக்குனர் கொரோனா பரவி வரும் இந்த சூழ்நிலையில் வெளிநாடு பிளான்ஸை கேன்சல் செய்துள்ளார். வெளிநாட்டில் படம்பிடிக்க வேண்டிய காட்சிகளை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் படம் பிடிக்க முடிவெடுத்துள்ளார் எச். வினோத்.
கொரோனாவின் அச்சுறுத்தல் அனைவரையும் பீதியில் தள்ளி உள்ளது. சில வெளிநாடுகள் கொரோனாவுடன் வாழவும் பழகி விட்டனர். இந்த முடிவு வெளிநாடுகள் பக்கம் தலை வைத்து படுக்கவும் அச்சமாக உள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் எச்.வினோத் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. தல அஜித்தின் படம் எங்கு எடுத்தாலும் ரசிகர்கள் கூட்டம் உற்சாகத்துடன் வரவேற்று ஹிட்டாகும்.