21 வயதில் மேயர் பதவியேற்கும் இளம் பெண்
இந்தியாவில் 21 வயதில் முதல் மேயராக இளம் பெண் ஆர்யா தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். பெண்ணுரிமை பேசும் நாம் இன்னும் பெண்ணிற்கு பல முட்டுக்கட்டைகளை வைத்திருக்கின்றோம். ஏதேனும் இந்த 21ம் நூற்றாண்டில் பெண்களின் சாதனை அளப்பரியதாக இருக்கின்றது.
இந்தியாவில் முதல் இளம் பெண் மேயர்
சவால்கள் நிறைந்த பயணத்தைத் தேர்ந்தெடுத்து வெற்றியும் பெறுகின்றனர். இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மேயராக 21 வயது ஆர்யா ராஜேந்திரன் என்ற இளம்பெண் தேர்வுசெய்யப்பட்ட இருக்கின்றார். இவர் இந்தியாவின் முதல் இளம் பெண் மேயர் என்ற பெருமையை பெறுகின்றார்.
உள்ளாட்சித் தேர்தல்
கேராளாவில் உள்ளாட்சி தேர்தல் நடபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும்பான்மை இடங்களை பெற்று வென்றது. பஞ்சாயத்து போர்டு, வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளில் பதவியேற்று வருகின்றனர்.
திருவனந்தப்புரம் மேயர்
திருவனந்தபுரத்தில் முடவன்முகல் வார்டில் கவுன்சிலர் ராஜேந்திரன் பதவி ஏற்கின்றார். கம்யூனிஸ்ட் கட்சி இவரை மேயராக அறிவித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆர்யா கட்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ஆவார் மாநில தலைவராகவும் இருக்கின்றார். இவர் பட்டப்படிப்பை கணிதத்துறையில் பெற்றுள்ளார். ஆரியா இளம் மேயர் என்ற பெருமையைக் கொண்டு அரசியல் ஒரு கலக்கு கலக்குவார் என்று நம்பப்படுகின்றது