செய்திகள்தேசியம்மருத்துவம்

கொரோனவுக்கு மருந்து தயார் பரிசோதனை வெற்றி!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது நேற்று மட்டும் தமிழகத்தில் சுமார் 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்தியாவில் இன்னும் எண்ணிக்கைகள் அதிகரிக்கின்றன. என்னடா செய்வது என்று கையை பிசையும் அரசு இதற்கு ஒரு நல்ல முடிவு தேடும் மக்கள், இந்த நிலையில் இந்தியாவில் ஏழு மருத்துவமனைகளில் ஃபேவிபிராவர் மருந்து கொடுத்து முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

இந்தியாவின் மருந்து நிறுவனமான கிளென்மார்க் மருந்து நிறுவனம் தனது தயாரிப்பை கொடுத்துள்ளது. இந்தியாவிலிருந்து மருந்து மக்களுக்கு கொடுக்க வேண்டுமென இந்திய நிறுவனங்களும் மருந்து தயாரிக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர். இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட ஆரம்பகட்ட நிலையிலுள்ள நோயாளிகளுக்கு ஃபேவிபிராவர் மருந்தைக் கொடுக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

கிளென் மார்க் மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் மருந்து தயாரிக்க ஒப்புதல் பெற்றது. இந்தியாவில் ஆரம்ப கட்ட நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுத்து சோதிக்கப்பட்டது, ஏழு மருத்துவமனைகளில் ஃபேவிபிராவர் கொடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றம் தெரிகின்றது. ஆர்டிசி பரிசோதனை செய்த 48 மணி நேரத்திற்கு பின் நோயாளிகள் இந்த சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுமார் 150 நோயாளிகள் கிளென்மார்க் மருந்து உட்கொண்டனர் இந்த மருந்தானது பதினாழு நாட்கள் நோயாளிகளுக்குத் தீவிரத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. கிளென்மார்க் ஃபேவிபிராவர் மூன்றாம் கட்ட சோதனையில் நோயாளிகளுக்குத் திருப்திகரமான முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. மருத்துவ சிகிச்சை சிறப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மூலம் 40 சதவீதம் பேர் தேறி வருகின்றனர். இந்த மருந்தானது உடல் வெப்பநிலை சீராக்குதல், ஆக்சிஜன் சீராக்குதல், இருமல் சரி செய்தல் ஆகிய பணிகளைச் செய்வதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இது தொடர்ந்து மக்களைக் காத்து வந்தால் நல்லதுதான்.

ஃபேவிபிரவர் மருந்து பெற்ற நோயாளிகள் 4 நாட்களில் குணமடைந்து உள்ளனர் என்ற தகவல்கள் கிடைத்து வருகின்றது ஆக்சிஜன் கொடுத்து சில நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்படுகிறது, அவர்களுக்கும் முன்னேற்றம் இருக்கின்றது. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்து வருகின்றனர் இந்தியா தொடர்ந்து ஒரு கொரோனாவை ஒழிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *