பணையக்கைதிகளாக இந்தியர்கள்…? இந்திய மறுப்பு…!
இந்திய மாணவர்களை உக்ரேனிய பாதுகாப்புப் படையினர் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்தும் மனித கேடயங்களாக பயன்படுத்தியும் ரஷ்ய எல்லைக்கு செல்ல விடாமல் தடுக்கிறார்கள் என ரஷ்ய அதிபர் புடின்-பிரதமர் மோடி இடையேயான உரையாடல் குறித்து ரஷ்ய அரசு அதிர்ச்சிகர அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக இந்தியா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், இந்தியர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. மாணவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுவது பற்றிய எந்தவொரு புகாரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பல மாணவர்கள் நேற்று கார்கிவ் நகரை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த சில நாட்களாக உக்ரைனில் இருந்து ஏராளமான இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதை சாத்தியமாக்கிய உக்ரைன் அதிகாரிகளின் உதவியை நாங்கள் பாராட்டுகிறோம்.
என இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.