செய்திகள்தேசியம்

உணவகமாக மாறும், பழைய ரயில் பெட்டிகள்..ரயில்வே அசத்தல்..

இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே துறை அதன் பழைய ரயில் பெட்டிகளை உணவகமாக மாற்றி அசத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவிய நிலையில், மருத்துவமனைகளுகு தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையி இந்தியாவில், மருத்துவமனை தட்டுப்பாடுகளை போக்கவும், கொரோனா நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டன. இதனைதொடர்ந்து மத்திய ரயில்வே துறை ஒரு முயற்சியை எடுத்துள்ளது.

அதாவது, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில், உள்ள பழைய ரயில் பெட்டியை உணவகமாக மாற்றி இந்தியன் ரயில்வே அசத்தியுள்ளது. உணவகத்தின் 90 சதவீத பணிகள் முடிந்து விட்டதாகவும், விரைவில், உணவகம் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உணவகம் திறக்கப்பட்டதும், 13 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக மேற்கு மத்திய ரயில்வே துறை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு மக்கள் மனதில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *