ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு..இனி இதை செய்தால் அபராதம்..
ரயிலில் பயணிகளிக்கு இடையூறு செய்யும் வகையில் அதிக சத்தமாக பாடல், இசை கேட்பதை இந்தியன் ரயில்வே தடை செய்துள்ளது. இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு பயணத்தை மிகவும் வசதியாகவும், இனிமையானதாகவும் மாற்ற, இந்திய ரயில்வே புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. அதன்படி பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் அதிக ஒலிப்பும் செயல்களுக்கு தடை விதித்துள்ளது. அதனௌ மீறும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டால், ரயில் ஊழியர்களே பொறுப்பாவார்கள் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்ததால், இந்த நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், குழுவாகப் பயணிக்கும் பயணிகள் வெகுநேரம் வரை பேசக் கூடாது என்றும், இரவு 10 மணிக்குப் பிறகு அனைத்து லைட்டுகள் அணைக்கப்படும் என்றும் புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. விதிகளை பின்பற்றாத பயணிகள் மீது ரயில்வே சட்ட விதிகளின்படி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.