செய்திகள்தேசியம்ராணுவம்

பாராளுமன்றத்தில் ராஜ்நாத் கம்பீரமான இராணுவ உரை

இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ராஜ்நாத் சிங்தாக்கல் செய்த அறிக்கையில் ஜனவரி 1 முதல் செப்டம்பர் வரையிலான பாகிஸ்தான் அத்துமீறிய விவரம் ராஜ்நாத்சிங் கொடுத்தார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் பாகிஸ்தான் இந்திய ராணுவ நிலைகளை அத்துமீறித் தாக்குதல் நடத்தி இருக்கின்றது.

சுமார் 3186 முறை தாக்குதல் கொடுத்திருக்கின்றது. இந்தியாவின் எல்லைப் பகுதியான 778 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தப் பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை சவாலான சூழலில் தள்ளி இருக்கின்றது. ஆனாலும் இந்தியா தனது முறையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்திருக்கின்றது. சுமார் 198 கிலோமீட்டர் தூரம் சர்வதேச எல்லை பகுதி இருக்கின்றது.

இந்த நிலையில் பாகிஸ்தான் 248 முறை அத்துமீறித் தாக்குதல் தொடுத்து இருக்கின்றது. கொரோனா காலகட்டத்தில் உலகமே முடங்கிக் கிடக்கும் அந்தத் தருவாயிலும் பாகிஸ்தான் அத்துமீறி ஒவ்வொரு மாதமும் 350 முதல் 400 முறை தாக்குதல் நடத்தி வருகின்றது. இப்பொழுதும் தாக்குதல் நடத்த தவறுவதில்லை.

கடந்த 2017 முதல் ஆயிரக்கணக்கான முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இருக்கின்றது. தற்போது ஆயிரத்தை தாண்டி 3186 முறை தாக்குதல் நடத்தியிருப்பது குறித்தும் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றது. சீனாவை ஆதரித்து இந்தியாவிற்கு வெறுப்பினை ஊட்டப் பாகிஸ்தான் என்றுமே துணையாக இருக்கும். குளிர்காலம் காஷ்மீரில் பயங்கரவாதிகள் மேலும் தொல்லையைக் கொடுக்க வாய்ப்பு இருக்கின்றது.

இந்திய ராணுவம் இத்தனை முறையும் அமைதியாக இருக்கவில்லை. தனது எல்லைக்குரிய விதிமுறைகள்படி செயல்பட்டு இருக்கின்றது. லடாக் பகுதிகளிலும் சீன, இந்தியா வீரர்கள் இருதரப்பிலும் பதட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. இன்றும் பாகிஸ்தான் அத்துமீறல் முடிவுக்கு வரவில்லை சீன வீரர்கள் குவிக்கப்பட்டு அவர்களுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் முறையாகச் செய்யப்பட்டு ஆயுதங்களுடன் காத்திருக்கின்றனர்.

போருக்காகத் தயாராக இருக்கின்றனர் பாகிஸ்தான் தன் பங்கிற்கு இந்தியாவை தொடர்ந்து அத்துமீறிச் சீண்டி வருகின்றது. இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுப்பதற்காக அங்கு நிறுத்தப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இரு நாடுகளும் எல்லையில் இந்தியாவை குறி பார்த்து நிற்க அனைவரையும் சமாளித்து கம்பீரமாக இந்திய ராணுவத்தினர் நிற்கின்றனர் என்பது இந்த நாட்டிற்கு பெருமை நாட்டு மக்களுக்குப் பெருமை தலைவணங்குவோம்.

தன்னிகரற்ற வீரர்களை எண்ணி தாய்நாடு காக்க எல்லையில் எந்நேரமும் விழிப்புடன் இருக்கும் இந்த வீரம் மிக்க இராணுவத்தினரை பெற்ற தாய்மார்களின் வீரவணக்கம் செலுத்தி நமது ஒவ்வொரு தினத்தையும் இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்காகப் பிரார்த்தனை மூலம் வாழ்வை வழி நடத்துவோம்.

நமது பயனற்ற போட்டி பொறாமைகள் ஒருவருக்கு ஒருவர் வஞ்சகம் இதையெல்லாம் விடுத்து வெற்றி பெறுவோம் நமக்காக உயிர் தியாகம் செய்யும் வீரர்களுக்காக ஒன்றுபட்டு ஆதரவு தருவோம் உள்ளிருந்து அவர்கள் எல்லைக்குச் செய்யும் சேவைக்கு மரியாதை செலுத்துவோம் இதுவே நன்றி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *