இந்தியாவில் ஒருங்கிணையும் நிறுவனங்கள்
இந்தியாவில் கூகுள் போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்குகின்றன இதன் காரணமாக இந்திய நிறுவனங்கள் ஒன்றாகச் செயல்பட திட்டமிட்டிருக்கின்றது.
பேட்டியத்தை தூக்கியது கூகுள்
கூகுள் தன்னுடைய ப்ளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் இணைப்பை துண்டித்தது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஆப்புகள் 30% கமிஷன் தொகையை கொடுக்க வேண்டும் என்று கூகுள் அறிவித்திருக்கின்றது. இதனை எதிர்த்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூட்டத்தில் இந்திய நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆப்களின் கூட்டணி
அத்துடன் இந்தியாவில் ஒரு சில ஆப்கள் ஒன்றாக இணைந்து ஐடி நிறுவனங்களை ஒருங்கிணைத்துப் புதிதாக அமைப்பினை உருவாக்க இருக்கின்றன. இதனைக் கொண்டு தனியாக இந்தியாவில் செயல்பட திட்டமிட்டு இருக்கின்றனர்.
கூகுளின் ஆதிக்கம்
ஆனால் கூகுளின் வளர்ச்சி உச்சத்தில் இருக்கின்றது அது நாட்டில் இருக்கின்ற 95 சதவீத ஸ்மார்ட்போன்களில் இருப்பதால் மீறி நிற்க முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. ஆனால் இந்தியா போன்ற மிகப்பெரும் மனித சக்தி கொண்டவர்கள் நிச்சயமாக நிற்கலாம் இந்தியா இதுகுறித்து முன்னமே யோசித்திருக்க வேண்டும்.
இந்தியாவுக்கென்று தனி
இந்தியாவிற்கு என்ற ஒரு தனி தேடுபொறி இருந்திருக்க வேண்டும் இந்திய இளைஞர்கள் உருவாக்கி வேண்டும். அரசு இதுகுறித்து முன்னமே ஆலோசித்து இருக்க வேண்டும். இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் இந்தியாவிற்கு என்று தனி தேடுபொறி இருப்பதில் என்ன தவறு, நமது ஐடி மூலைகள் எல்லாம் உலகிலுள்ள நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அப்படி இருக்க நமக்கென்று தனி ஒரு வீட்டின் மூலைகளில் இல்லாதது ஒரு பெரும் இழப்புதான் பரவாயில்லை மீண்டும் இந்த ஒரு வாய்ப்பினை நழுவ கூடாது நமக்கென்று ஒரு தேடுபொறி உருவாக்க வேண்டும்.
நமது தேசத்தில் இருக்கும் ஐடி மூளைகளை ஒருங்கிணைக்க வேண்டும். கூகுளே இயக்குவதே ஒரு தமிழன் என்கின்றபோது இந்தியாவில் ஏன் ஒரு தேடுபொறி இல்லை என்ற கேள்வி எப்போதிலிருந்து கேள்விகள் இருக்கின்றது அது இப்போது தான் பலருக்கும் வருகின்றது