மக்களாட்சியை வழங்கிய குடியரசு தினம் சிறப்புகள்
குடியரசு என்றாலே மக்கள் ஆட்சி என்பது பொருள். மக்கள் தாங்கள் விரும்பிய ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கவும், மக்களுக்காக மக்கள் அரசு என்பதற்காகவும், குடியரசாக அறிவிக்கப்பட்டது. முழு சுதந்திரத்தை இந்தியா பெறுவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் குடியரசுக்கு இலக்கணம் வகுத்தார்.
மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்த, மக்களாட்சி ஏற்படுத்தினால் இந்தியா முழு சுதந்திர நாடாக இயங்கும் என இச்சட்டம் உருவாக்கப்பட்டது. 1950-ஆம் ஆண்டு முதல் இந்திய விடுதலைக்குப் பிறகு ஜனவரி 26-ல் இந்திய தேசிய குடியரசு தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்து குடியரசு தின கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தவர் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார்.
ஜனவரி 26 நாட்டிற்கு விடுதலை வாங்கித்தந்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என கொடியேற்றி தேசிய கீதம் பாடி இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன. கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நாளில் உலகில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதை பெருமிதம் கொள்வோம். குடியரசுக்கு பின்னால் பல தேசத் தலைவர்களின் தியாகம், லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும் மறைந்துள்ளன என்றால் யாரும் மறக்க இயலாது. ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு இந்தியர்கள் குடியரசை கொண்டாடுகிறோம்.