சீனாவை சாய்க்க சீறி எழுந்த இந்திய சிறுபிள்ளைகள்!
சீனாவின் சீண்டலை பார்த்து கொதித்து எழுந்த 10 இந்திய சிறுவர்கள் பந்தாவாக எங்களை விடுங்கள். சீனாவை நாங்கள் கொடுத்து விட்டு வருகின்றோம் என்று கிளம்பி சென்றுள்ளனர். இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சினையானது கல்வான் பகுதியில் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இந்திய தரப்பில் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனை செய்திகள் கேள்விப்பட்ட வட மாநிலத்து விளையாட்டுப் பிள்ளைகள் 10 பேர் குழுவாக பலர் வேலைக்கு செல்வதாக கூறினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் எங்கு செல்வதாக கேட்டபோது நாங்கள் சீனா செல்கின்றோம். எல்லையில் எங்கள் ராணுவ வீரர்களை கொன்ற சீன வீரர்களை மீண்டும் நாங்கள் வதைக்க வேண்டும். என்று கம்பீரமாக பெருமிதத்துடன் காவல்துறை அதிகாரிக்கு பதிலளித்துள்ளனர்.
இதனை பார்த்த பெருமைப்பட்டு இது முறையான வழி அல்ல இதற்கு நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். எல்லையில் நின்று போர் புரிய வேண்டுமென்றால் அதற்குரிய தகுதியை பெற வேண்டும். ஆகையால் திரும்பிச் செல்லுங்கள். நிச்சயம் நீங்கள் சீன எல்லைக்கு செல்லும் நாள் வரும்.
அந்த நாளும் பாரதமாதா உங்களை எண்ணி பெருமைப்படுவார். உங்களை பெற்ற பெற்றோரை எண்ணி பெருமிதம் கொள்கின்றேன். இதே போன்று உணர்வுடன் நாட்டுக்கு பாதுகாப்பு சேவையை செய்ய நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பியுள்ளார்.
காவல்துறை அதிகாரி நிகழ்ச்சி நடந்த அந்த காட்சியை காணும் போது இந்த தேசம் இந்திய தேசம் சரியாக சென்று கொண்டிருக்கின்றது என்பதை நாம் உணர முடிகின்றது.