சீறிப்பாய்ந்த பிரமோஸ்… இலக்கை துல்லியமாக தாக்கி வெற்றி..
பிரமோஸ் சூப்பர்சோனிக்கின் புதிய வகை ஏவுகணையை இந்தியா இன்று ஒடிசா மாநிலத்தின் பாலாசோரில் வெற்றிகரமாக செலுத்தி சோதனை செய்தது.
ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகள் பொருத்தப்பட்ட புதிய (அப்டேட்டை) பதிப்பை இந்தியா விஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக சோதனை செய்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன்னதாக ஜனவரி 11 ஆம் தேதி, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணையானது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டு முயற்சியாகும். இந்திய கடற்படையின் சமீபத்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை இந்திய கடற்படையில் உள்ள போர்க்கப்பல்களின் முக்கிய ஆயுதமாக கருதப்படுகிறது.