மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறித்து..
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், உலகிலேயே பல நாடுகளிலே பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது காரணமாகவும் படிப்படியாக கச்சா எண்ணெயின் விலை குறைந்தது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கச்சா எண்ணையை குறித்து கூறிய நிலவரப்படி ஜனவரி மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் 64 டாலராக இருந்தது.
பிப்ரவரி மாதத்திலேயே ஒரு பேரல் 54 டாலராகவும், இதன் பிறகு மார்ச் மாதத்தில் ஒரு பேரல் 33 டாலராகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டணம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் மற்றும் படூர் ஆகிய இடங்களில் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் நிறுவப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளன.
மேலும் பற்றாக்குறை காலங்களில் அல்லது போர் போன்ற காரணங்களால் திடீரென அதிக தேவை ஏற்படும் போது இந்த கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெயை உபயோகித்து பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க முடியும் என்று தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.
குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததன் மூலம் ரூபாய். 5000 கோடி சேமிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சாத்தவ் கேட்ட கேள்விக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்து மூலமாக பதிலளித்தார்.
இதில் ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் சரிந்த நிலையில் இந்தியா 16. 71 மில்லியன் பேரல் கச்சா எண்ணையை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த கச்சா எண்ணெய் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள கிடங்குகளில் சேமித்து வைத்துள்ளதாகவும் இதன் மூலம் 5000 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு செலவு மிச்சம் என்றும் குறிப்பிட்டார்.