அத்துமீறும் பாகிஸ்தான் பதிலடி தரும் இந்தியா !
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் கைகலப்பு செய்ய ஆரம்பித்திருக்கின்றது. இதற்கு இந்திய ராணுவம் தனது தரப்பிலிருந்து பதிலடி கொடுத்து இருக்கின்றது. அடங்காத பாகிஸ்தான் அடக்க வேண்டி காத்திருக்கும் இந்தியா இதுதான் இன்றைய நிலைமையாய் இருக்கின்றது.
காஷ்மீரின் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தங்களது தாக்குதலை தொடங்கியிருக்கின்றனர். சும்மாயிருக்குமா இந்திய ராணுவம் அடித்துத் துவம்சம் செய்திருக்கின்றது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகள் பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்தத்தை எல்லாம் காற்றில் பறக்க விட்டு இந்தியாவின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்திய தரப்பில் சும்மா இருக்கவில்லை இவர்கள் எப்போதெல்லாம் எல்லை மீறுகிறார்களோ அப்போதெல்லாம் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பாகிஸ்தான் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க ஆசைப்படும் போதெல்லாம் இந்தியா அதற்குத் தக்க பதிலடி கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாகிஸ்தான் அதற்கு அடங்கிய பாடில்லை நீ ஒவ்வொரு முதலும் பதிலடி கொடுக்கிறார் அதைவிட உன்னை துன்புறுத்திப் பார்ப்பதில் நான் மன மகிழ்ச்சி அடைகின்றேன் என்ற ஒரு திமிரு தோணியில் பாகிஸ்தான் இந்தியாவை வம்புக்கு இழுத்து கொண்டிருக்கின்றது. இந்திய இராணுவத்தால் பலமுறை பதிலடி கொடுத்தாகிவிட்டது.
ஆனால் பாகிஸ்தான் இதனைக் குறித்து எந்த ஒரு வெட்கமும் இல்லாமல் இந்தியாவை பதம் பார்ப்பதில்லை குறியாக இருக்கின்றது. இந்தியா தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை ஆழ்ந்து கவனித்து வருகின்றது. இந்தியாவை எதிர்த்து கர்த்தி வரும் பாகிஸ்தான் மற்றும் சீனா நகர்த்திவரும் காய்கள் இந்தியா கண்காணித்து வருகின்றது. சீனா தன்னை அறிவாளியாகக் காட்டிக்கொள்ள செய்யும் அட்டகசங்கள் அனைத்தும் இந்தியாவிற்கு தெரிந்த கொண்டுதான் வருகின்றன.
இந்நிலையில் சீனாவை எதிர்க்க இந்தியா இராணுவ ரீதியாகத் தயராக இருக்கின்றது என்பது குறிப்பட்த்தக்கதாகும். அதுகுறித்து இராணுவத் தளபதி தெரிவித்த கருத்தின்படி பார்த்தால் இந்தியா எதற்கும் தயராக இருக்கின்றது.