இங்கிலாந்து அபார வெற்றி – கோஹ்லியின் போராட்டம் தோல்வி
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முன்னதாக சென்னையில் 5ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடங்கியது.
சர்வதேச டெஸ்ட்
இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் (218 ரன்கள்) அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இங்கிலாந்து இந்தியா வருகை
அவருக்கு டொமினிக் சீபிலே (87 ரன்கள் ) மற்றும் பென் ஸ்டோக்ஸ் (82 ரன்கள்) ஒத்துழைப்பு கொடுக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இந்திய அணி எஸ்ட்ராஸ் வகையில் மட்டும் 45 ரன்கள் விட்டு கொடுத்தது.
இந்தியாவின் இன்னிங்ஸ்
அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய இந்தியா அணி புஜாரா (73), ரிஷாப் பண்ட் (91) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (85) ரன்கள் உதவியுடன் 337 குவித்தது. இங்கிலாந்து தரப்பில் டோம் பெஸ் 4 விக்கெட்களை கைப்பற்றினர்.
பாலோ ஆன் இல்லாமல் இந்தியா
அடுத்து இந்திய அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் மேற்கொண்டு இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியின் தடுமாற்றம்
இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்களை வீழ்த்தினார். 420 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி முதல் இன்னிங்க்ஸை போலவே இம்முறையும் தடுமாறியது. சுபமண் கில் 50 ரன்கள் மற்றும் விராட் கோஹ்லி 72 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் சோபிக்க வில்லை. இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கடைசியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
WRITTEN BY NAVEEN