அதிவேகமாக பரவும் ‘புதிய வைரஸ்’
உலகை அச்சுறுத்தி வந்த கொரோன வைரஸ் பரவும் வேகத்தை விட 70 சதவீதம் வேகமாக பரவும் புதிய வைரஸ் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளன. இங்கிலாந்து பகுதிகளில் மீண்டும் அதிகமான கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் கொண்டுவரப் பட்டுள்ளன.
- 70 சதவீதம் வேகமாக பரவும் புதிய வைரஸ்.
- அதிகமான கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம்.
- டெல்லி விமானங்களை தடை.
உருமாறிய புதிய வகை வைரஸ் காரணமாக லண்டனில் இருந்து டெல்லி வந்த பயணிகளில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஐரோப்பிய நாடுகள் பலவும் பிரிட்டனுக்கான வான்வழி மற்றும் தரைவழி எல்லையை மூடி விட்டன. டெல்லி விமானங்களை தடை செய்ய கோரி மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டன் விமானங்கள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்தியா வர தடை விதித்தது மத்திய அரசு. பிரிட்டனில் லண்டன் உள்ளிட்ட தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் கரோனா வைரஸ் ஒரு புதிய வகை வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளன.