சீனா கெடுபிடிகளால் இந்தியா எதற்கும் தயார்
சீனா தனது கெடுபிடியை நிறுத்தாமல் தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகின்றது. இந்தியா பொறுத்து, பொறுத்து பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதற்காகச் சீனாவின் பூச்சாண்டி தனத்தை பார்த்து இந்திய பொம்மையாக நிற்கவில்லை என்பதை இந்தியா மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கின்றது. அதன்படி இந்தியா சீனா இரு நாடுகளுக்கிடையே இந்திய வீரர்கள் ஆயிரக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பதட்ட நடவடிக்கையை இந்நிலையைப் போக்க தக்க நடவடிக்கைகள் இரு நாடுகளும் எடுத்து வருகின்றன. இருப்பினும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை இந்த நிலையில் சீனா தொடர்ந்து தனது ஊடுருவலை இந்தியாவில் மேற்கொண்டு வருகின்றது. சீனாவின் தாக்குதல்கள் எதுவாயினும் அதனை இந்தியா எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றது என்று இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
இந்தியாவின் சார்பாக ராணுவ ரீதியில் ஐந்து முறை தூதரக ரீதியில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தி ஆகிவிட்டது. ஆனால் சீனா திருந்துவதாகத் தெரியவில்லை இரு நாடுகளிடையேயான பதற்றமான நிலை தணியவில்லை.
இதன் காரணமாக இந்தியாவில் முப்படைகளும் தயாராக இருக்கின்றன. இதுகுறித்து அரசுத் திட்டங்களை முறையாகத் தீட்டி வருகின்றது. எப்போது வேண்டுமானாலும் இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்பதால் முப்படைகளுக்கும் தயாராக இருக்கின்றன.
சீனாவிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து இந்தியா சீனா இடையே நிகழும் இந்த அமைதியற்ற நிலையானது இரு நாடுகளையும் போர் பதட்டத்தில் நிற்க வைத்திருக்கிறது என்பதை குறிக்கின்றது. என்ன நடக்கிறது, இந்த நிலை எத்தனை நாட்கள் நீடிக்கும் என்கிற பட்சத்தில் இந்தியா தொடர்ந்து தனது தக்க பதிலடி கொடுக்கும். சீனா இந்தியா எப்பொழுது அசரும் எதிர்பார்த்து நிற்கின்றது.