செய்திகள்தேசியம்ராணுவம்

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி-பின்வாங்குமா சீனா

இந்தியா சீனா லடாக். எல்லை சிக்கல் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்து இருக்கின்றது. இந்தப் பிரம்மோஸ் ஏவுகணை சுமார் 400 ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து இலக்கை தாக்கும் திறன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரமோஸ் ஏவுகணை

இந்தியா சீனா இடையே தொடர்ந்து எல்லைப் பிரச்சினைகள் லடாக்கில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் இந்தியா ரஃபேல் வாங்கியது. அதனை அடுத்து தற்போது பிரமோஸ் ஏவுகணையைப் பரிசோதித்து இருக்கின்றது.

பிரமோஸ் இந்தியாவில் சோதனை வெற்றி

சீனாவிற்கு பயத்தை உண்டாக்கும் அல்லது இந்தியா எதற்கும் தயார் என்பதை சீனாவுக்கு உணர்த்தி எடுத்துக் காட்டுவதாக இருக்கும் என்று வல்லுநர்கள் பேசி வருகின்றனர். ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் மொபைல் சார்ஜர் மூலமாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக பிரமோஸ் ஏவுகணை பரிசோதித்தது.

பிரமோஸ் வெற்றியில் டிஆர்டிஓ

டி.ஆர்.டி.ஓ ஆராய்ச்சியில் நடந்த இந்தச் சோதனை இந்தியா வெற்றிகரமாகச் செய்திருக்கின்றது. இந்த ஏவுகணைக்கான பிரேம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை வெற்றிகரமாக நடத்தியதன் காரணமாக விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுக்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ஞ்நாத் சிங் தெரிவித்தார்.

உள்நாட்டு பாதுகாப்பு தயாரிப்பு

உள்நாட்டில் தயாரிக்கப்படும் உபகரணங்களைக் கொண்டு மேலும் பல்வேறு கண்டுபிடிப்புகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனையும் டுவிட்டரில் தெரிவித்து ராஜ்நாத் சிங்வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

தயாராகின்றது இந்தியா

உள்நாட்டில் பிரம்மோஸ் ஏவுகணைக்காகத் தயாரிக்கப்பட்ட பூஸ்டர் மட்டும் ஏர் பிரேம் சூப்பர் சானிக் ஏவுகணை வெற்றிகரமாக அமைந்திருப்பது நாட்டிற்கு ஊக்கச் சக்தியை அதிகரிக்கின்றது. இந்தியா எதற்கும் தயார் என்பதை எல்லை நாடுகளான பாகிஸ்தானும், சீனாவும் தெரிந்துகொள்ள வேண்டும். என்பதற்காகவே இந்தப் பரிசோதனையை இந்தியா மேற்கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எல்லையில் சவால்விடும் இந்தியா

சீனா இந்தியாவுக்கு தொடர்ந்து கொடுத்து வந்த நெருக்கடியை இந்தியா கட்சிதமாகச் சமாளித்து சீனாவின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தியிருக்கின்றது. இந்தியப் பாதுகாப்புப்படை மற்றும் பாதுகாப்பு படைக்கான அனைத்து உபகரணங்களையும் இந்தியா உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் மற்ற நாடுகளில் வாங்கி வருகின்றது. இராணுவத்திற்கு முழு முடிவெடுக்கும் உரிமையை இந்திய அரசு கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *