Jallikattu bulls

அதிகரிக்கும் கோவித்-19 தொற்று ஆட்டம் காணும் மக்கள்

தமிழகத்தில் கொரானாவின் தாக்கம் அதிகரித்து வரும் எண்ணிக்கையால் அரசு என்ன செய்யும் என்பது தெரியவில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சென்னையில் மட்டும் ஆயிரத்து அதிகமானோர் கொரானா பாதிப்பு உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கோவித்-19:

தமிழகத்தில் மட்டும் 31 ஆயிரத்து 567 பேர் பாதிப்பால் உறுதி செய்யப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர் நேற்று மட்டும் 1515 பேர் கோவித்-19 தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்ரனர். ஒரே நாளில் 15 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை தமிழ்நாட்டில் 6 லட்சம் பேர் வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளனர். 17 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகரித்து வரும் கோவித் 19 சிகிச்சை முறைகளை பின்பற்றி சமூக இடைவெளி உள்ளிட்ட பல மாற்றங்களை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழகத்தில் இந்த நிலை என்றால் நாட்டில் ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு மேல் கொரானா தொற்றால் உறுதி என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் கொரானாவின் பாதிப்பு குறைந்தபாடில்லை. ஆனால் ஊரடங்கு தளர்வு என்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியில் கோவித்-19:

புதுடெல்லியில் மட்டும் 10,000 பேர் வரை கோவித்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை சுகாதாரத்துறை அமைச்சகம் இதனை உறுதி செய்துள்ளது. இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரானா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 25,000 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் உயிழப்பு 300 வரை உள்ளது. இதுவரை கோவித்-19பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாளை முதல் முதற்கட்ட ஊரடங்கு தளர்வு என்பது அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது இந்நிலையில் இந்தியாவில் 46 லட்சம் பேருக்கு மேல் கோவித்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 75 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வழிப்பாட்டு தளங்கள் திறக்கப்படுவதால் மக்கள் இன்னும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். தேவையற்ற சவால்களை உருவாக்கக் கூடாது என்பதை தனி மனிதர்கள் அனைவரும் உணர்ந்து வழிபாடு செய்யலாம்.

அரசு தினமும் அறிவிப்புகளை அறிவித்தவண்ணம் உள்ளது. மக்கள் இதனைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் கைக்கழுவுதல் பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டுவதை நிறுத்த வேண்டும். பொது இடத்தில் எச்சில் துப்புவதை நிறுத்துதல் என்பது இனி வரும் காலங்களில் மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *