சுதந்திர தினத்தை இந்தியா மட்டுமின்றி பல நாடுகளும் கொண்டாடுகின்றன
இந்திய சுதந்திர தினமானது ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பே ஆங்கிலேயரால் அறிவிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டன. பிறகு ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு அமலுக்கு வந்தது. இத்தகைய சுவாரசியம் மிக்க சுதந்திர தினத்தினை வரலாறு தெரியாமல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம்.
1945 ஆகஸ்ட் 15 இல் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் தோல்வி அடைந்த ஜப்பானிய வீரர்கள் அப்போதைய ஆங்கிலேயரின் கிழக்காசிய கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டன் இடம் சரணடைந்தார். இந்த தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க மவுண்ட்பேட்டன் முடிவு செய்திருந்தார். ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது புதிய நாள் அதன்படி 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 நள்ளிரவு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டன.
இந்தியாவை போல கொரியா, காங்கோ, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரத்தைப் பெற்றுள்ளன. அது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் கொரிய ஜப்பானிடம் இருந்து விடுதலை பெற்றது. 1960ஆம் ஆண்டு காங்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றன. 1961 ஆம் ஆண்டு பஹ்ரைன் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
இந்திய சுதந்திர தினம் அல்லது இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றன. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும், பலரின் உயிர்த் தியாகங்களுக்கு பிறகும், இந்த பிரிட்டிஷ் காரர்களிடம் இருந்து ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா சுதந்திரத்தைப் பெற்றது.
இந்தியா மட்டுமில்லாமல் மற்ற சில நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி நலத் திட்ட உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய பின்னர் விடுமுறை அளிக்கப்படும்.