இந்தியாவில் கட்டப்பட்ட 44 பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!
இந்திய எல்லைப் பகுதிகளில் இதுவரை இல்லாத பிரம்மாண்ட சாலைகளை அமைத்து இந்தியா சிறப்பாகச் உருவாக்கிச் செயல்படுகின்றது.
- இந்திய எல்லைப் பகுதிகளில் கிட்டத்தட்ட 44 பாலங்கள் கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருக்கின்றன.
- மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணிந்தார்.
- இந்திய எல்லையில் லடாக் பகுதியில் 7 பாலங்கள் இந்தியப் பாதுகாப்பு படைக்கு மிகவும் பலமானது ஆகும்.
44 பாலங்கள்
இந்தியாவின் லடாக், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் எல்லை சாலை அமைக்கப்பட்டிருக்கின்றது. மொத்தம் 44 பாலங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நாட்டுக்கு அர்ப்பணித்து ராஜ்நாத் சிங் தலைமையில் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பணி நடைபெற்றது.
எல்லையில் 7 பாலங்கள்
இந்திய லடாக் எல்லைப் பகுதியில் முக்கியம் வாய்ந்த 7 பாலங்கள் இந்திய ராணுவ வீரர்களுக்குப் போக்குவரத்தை எளிமையாக்கும் மற்றும் இலக்கைச் சென்றடைய விரைவாக பயணத்தை அடக்க இது உதவியாக இருக்கும்.
2 ஆண்டுகளில் பெரிய சாதனை
இமாச்சலப் பிரதேசத்தில் பாதை அமைக்கும் பணி சுமார் 290 கிலோமீட்டர் அமைக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் சற்று நாளில் முழுமையாக முடிந்துவிடும். இதன்மூலம் கார்களுக்குச் செல்வது எளிதாக இருக்கும் நாட்டு மக்களும் இந்தப் பாதையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
புத்தாக்கச் சாலைகள்
எல்லைப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலங்கள் மிகப்பெரிய அளவில் இந்தியாவிற்கு உதவியாக இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மலைப்பகுதிகளில் மட்டும் 2500 கிலோ மீட்டர் புதிதாகச் சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இது உண்மையில் மாபெரும் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
இத்தகைய பாலங்கள் போக்குவரத்தை எளிதாக்கி விரைவில் சென்று வர உதவியாக இருப்பதுடன் நாட்டின் பாதுகாப்புக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்