கொரோனாவின் கொடூரப் பிடியில் இந்தியா!
இந்தியாவை பதம் பார்க்கும் கொரோனா, மிரண்டு போகும் மக்கள் இந்தியாவில் நேற்று வரை மட்டும் கொரோனா தொற்றால் 306 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கோரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 15, 413 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது இப்படி இருக்க இதுவரை கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 306 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2, 27 ஆயிரம் பேரருக்கு மேல் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 451 பேர் கொரோனா தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 254 பேர் ஆவார் இந்தியாவில் கொரோனாவின் தொற்றில் பாதிக்கப்பட்ட மாங்கிலங்களான மகாராஷ்டிராவில் முதலிடமும் அதற்கடுத்து டெல்லி பின் தமிழ்நாடு, குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகரித்து காணப்படுகின்றது என்பதனை அரசு உறுதி செய்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் 51,377 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தின் மட்டும் இதுவரை கொரோனாவினால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 32 754 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக அளவில் பாதிப்படைந்தவர்கள் என்று பார்த்தால் அது சென்னைதான், சென்னையில் மட்டும் 41, 172 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 53 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவுடன் ஒப்பிடும் போது, இந்தியா முழுமைக்கும் கொரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 757 பதிவு செய்துள்ளது அரசு. நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை பெருகி பெரும் தாக்கத்தை இந்தியாவில் ஏற்பட்டு வருகின்றது. நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும் நிச்சயம் வெற்றி பெறும். தடைகள், சோதனைகள் என்ன இருந்தாலும் கொரோனாவின் கொட்டத்தை இந்திய மக்கள் கடந்து வருவார்கள் என்றும், இதுவும் கடந்து போகும் என்றும் நாம் உறுதியுடன் போராடுவோம் வெற்றி நிச்சயம். தொடர்ந்து இழப்புகள் வருவதும் ஆதனால் நாம் மன தைரியத்தை இழக்க வேண்டியதில்லை.