சுதந்திர தின வரலாறு போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்
200 ஆண்டுகளாக நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும். அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம். என்றென்றும் கொண்டாடுவோம்.
நமது சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களும், புரட்சியாளர்களும் தள்ளாடும் வயதைக் கடந்து கொண்டிருக்கும் வேளையில் சுதந்திரத்தைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் நமது இந்திய நாட்டின் பிரஜைகள் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். 1947 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள் மற்றும் ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள் என்று சொன்னால் மிகையாகாது.
இறையாண்மை கொண்ட நாடாக திகழும் இந்தியாவின் சுதந்திரம் என்பது நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள், தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நம் தாய்நாடு இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் அரை நூற்றாண்டுகள் கடந்து நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் முதன் முதல் காரணம் நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே.
ஆரம்பகால இந்தியா பாரத தேசம் என்று அழைக்கப்படும். நமது நாடு பாகிஸ்தான் கிழக்கு வங்காள தேசம் என பெருவாரியான பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தன. மன்னர்கள் ஆட்சியில் மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும் இருந்த நமது நாடு செல்வ செழிப்பில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது. தென்னிந்தியாவை சேர, சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து அவர்களது புகழை மேன்மேலும் ஓங்கச் செய்தது. இவர்களை தொடர்ந்து இஸ்லாமியர்கள் தில்லி சுல்தானகம், தக்காண சுல்தானங்கள், விஜயநகரப் பேரரசு, முகலாயப் பேரரசு, மராட்டியப் பேரரசு, துரானி பேரரசு, சீக்கியப் பேரரசு என்று பலரும் நமது நாட்டின் எல்லைகளையும், செல்வங்களையும் விரிவு படுத்துவதில் மிகவும் கவனமாக இருந்துள்ளனர்.
மேலை நாட்டவர்களின் வருகை வந்தோரை வாழவைக்கும் நாடெங்கள் நாடு என்ற பெருமை நமது இந்தியாவிற்குத் தொடக்கத்திலிருந்தே உள்ளது. விஜயநகரப் பேரரசு காலத்தில் நமது இந்தியாவிற்குக் கடல்வழியாக முதன்முதலில் வந்தவர் தான் வாஸ்கோடகாமா. ஒரு போர்ச்சுகீசியர் ஆன அவர் கடல் வழியே இந்தியாவிற்கு வழியைக் கண்டுபிடித்து நமது நாட்டில் கால் பதித்துள்ளார். இவர் வருகையைத் தொடர்ந்து இந்தியாவில் உணவுக்கு சுவை சேர்க்கும் கறிமசாலா பொருட்கள் இருப்பதை அறிந்த ஐரோப்பியர்கள் தங்களது நாடுகளுக்கு விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட கோழிக்கோடு துறைமுகத்தில் வந்திறங்கினர். பண்டமாற்று முறைக்கு வித்திட்டது. போர்ச்சுகீசியர்கள் இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்துக் கொண்டனர்.
இவர்களைத் தொடர்ந்து டச் ஆங்கிலேயர்கள் போன்ற அந்நிய நாட்டவர்கள் நமது நாட்டிற்கு வருகைத் தந்ததால் அவர்களும் போர்ச்சுகீசியர்கள் போலவே வாணிக முகாம்களை அமைக்க எண்ணி சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர். பிரெஞ்சுக்காரர்களும் பின்தொடர்ந்தனர். வாணிகம் என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழையும் ஐரோப்பியர்கள் நாட்கள் செல்ல செல்ல அந்நாட்டின் சிம்மாசனப் பொறுப்பைக் கைப்பற்றினர். பல நாட்டவரும் இந்தியாவுக்குள் நுழைந்ததால் பல போர்களும், குழப்பங்களும் நிலவியதால் ஐரோப்பியர்கள் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். தாங்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளையும் ஒரே நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடம் இழந்தனர்.
ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி
முகலாயப் பேரரசர் ஜெஹாங்கீர் இன் அனுமதி பெற்ற பின்னர் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு கிழக்கிந்திய கம்பெனியை நிறுவினார்கள். ஐரோப்பியர்களை மிகவும் சூழ்ச்சியால் வென்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து வாணிகம் செய்து வந்ததோடு மட்டுமில்லாமல் நாளடைவில் அவர்கள் வரி செலுத்தாமல் வணிகம் செய்ததால் அவர்களை வங்காளத்தின் நவாப் எதிர்த்ததால் பிளாசி யுத்தம் தொடங்கியது.
நவாப் ஆங்கிலேயரிடம் தோல்வியுற்று இந்தியாவில் உள்ள நிலங்களை ஆக்கிரமிக்கத் துவங்கினர். போரிலும் வெற்றிப் பெற்று வங்காளத்தை ஆட்சி செய்ய அப்போதைய முகலாயப் பேரரசின் அனுமதி பெற்றதால் இந்தியா முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர முதன்முதல் காரணமாக இருந்தது வரிகள் நிலங்கள் கையகப்படுத்துதல் காரணமாக இந்தியா பஞ்சம் வரும் நிலைமைக்குத் தள்ளப் பட்டன.
கிழக்கிந்திய நிறுவனத்தால் ஏற்பட்ட இத்தகைய மாபெரும் இழப்பைக் கண்டு வெகுண்டு துடிப்பான இளைஞர்கள் பலரும் இணைந்து இந்திய கலகம் இயக்கத்தை முகலாய பேரரசர் பகதூர் ஷாவை மானசீக தளபதியாகக் கொண்டு உருவாக்கினார்கள். முதல் இந்தியப் போர் என்று அழைக்கப்பட்டது. ஒரு வருடமாகப் போராடிய பின்னர் இயக்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதன் தளபதியையும் நாடு கடத்தி முகலாய வம்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர் ஆங்கிலேயர்கள்.
முதல் இந்தியப் போரை
ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் முதல் இந்தியப் போரைத் தொடர்ந்து அதிகாரத்தை நேரடியாக செயல்படுத்த முடிவெடுத்தனர். ஆங்கிலேயர்கள் முதல் இந்தியப் போரைத் தொடர்ந்து பல போராட்டங்களிலும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். உலகிலுள்ள நாடுகளுக்கிடையே நிலவிய மோதல்கள் மற்றும் விரோத போக்குகளால் 1914ல் முதல் உலகப் போர் ஆரம்பமானது. ஆங்கிலேயர்கள் நமது இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்ததால் அவர்களது போர் முயற்சிகளுக்கு நமது இந்தியா பெருமளவில் பங்களித்தது.
உயர் உயிரிழப்பு விகிதம், உயர்ந்த பணவீக்கம், பரவிய இன்ஃப்ளுயன்ஸ், கொள்ளை நோய் மற்றும் போரின் போது ஏற்பட்ட வர்த்தகத்தின் பாதிப்பு போன்றவை இந்திய மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. நாடு முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் வெடித்துக் கொண்டிருக்க அமைதியால் மட்டும் தான் சுதந்திரம் அடைய முடியும் என்று எண்ணி 1930 தண்டி யாத்திரை எனப்படும் உப்பு சத்தியாகிரகம் நடத்தினார்.
காந்தி முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது இப்போதுதான். காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான தோடு மட்டுமல்லாமல் அவர் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பிரதிநிதியாக கலந்து கொண்டார். இம்மாநாடு தோல்வி யடைந்ததைத் தொடர்ந்து அவர் இந்தியா திரும்பினார். இதே ஆண்டில் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பகத்சிங் ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போரிலும் இந்தியா கலந்து கொண்டன. காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள். இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரித்தனர். தனிநபர் சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டது. நேதாஜி இந்திய ராணுவத்தை ஜப்பான் உதவியுடன் உருவாக்கினார். கப்பற்படை எழுச்சி எழுப்பப்பட்டது.
சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பிய தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட களைப்படையவில்லை. பிரித்தானிய மக்களும் பிரித்தானிய ராணுவமும் இந்தியாவில் மென்மேலும் அடக்குமுறையை ஏற்படுத்துவதற்கு விருப்பமற்ற இருந்தது.
சுதந்திர தேசமானது
1947 பிரித்தானிய இந்தியா கவர்னர் ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் ஜூன் 3 ஆம் தேதியன்று பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா என்றும் முஸ்லீம் பாகிஸ்தான் என்றும் பிரித்து அளிப்பதாக அறிவித்தார். இந்தத் தேசப் பிரிவினையால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்து சென்றது. இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் சுதந்திர தேசமானது.
இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் பதவியில் தொடரும் படி அழைத்தார்கள். அவர்களது அழைப்பை ஏற்ற அவரும் சிறிது காலம் பதவியில் இருந்தார். பின்னர் 1948 ஆம் ஆண்டு ஜூனில் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார்.
இன்றைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து உரையாற்றுவார். முப்படை அணிவகுப்பு நடனம், நாட்டியம் எனப் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நடைபெறும். நாமும் இந்திய குடிமகன்களாக வாழ வைத்த போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்.