ஆரோக்கியம்வாழ்க்கை முறை

மாதவிடாய் காலத்தில் எடை கூடுகிறதா இதை கவனிங்க

மாதவிடாய் காலத்தில் எடை கூடுகிறதா? இதை கவனிங்க. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அளவுக்கதிகமான சோர்வும், உடல் வலியும், அசதியும் ஏற்படுவதாக இருக்கும் சில பெண்களுக்கு. ஒரு சிலருக்கு சாதாரண நாட்களை விட எடை கூடி இருப்பதை போன்ற உணர்வு தோன்றும்.

இன்னும் சிலருக்கு எடை கூடும். அதிகபட்சமாக மூன்று கிலோ வரை எடை கூடி இருப்பதாக தெரியும். இதன் காரணம் உடலிலுள்ள புரோஜெஸ்ட்ரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் காரணமாக இருக்கலாம். உடல் அளவில் மட்டுமல்லாது, மனதளவிலும் மாற்றங்களை உருவாக்கி இருக்கும்.

ஹார்மோன்களின் மாற்றத்தினால் உடலில் நீரின் அளவு குறையும். இதனால் எடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுவதால் தசைகள் இறுகி, மார்பகங்களில் வீக்கம் மற்றும் வயிற்றுப் பகுதி பெரிதானது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும்.

பெண்களுக்கு இதனால் மிகவும் சோர்வடைந்து சிலருக்கு எடை குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு குறையாமல் அப்படியேவும் இருக்கலாம். வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளில் பிடிப்பு இருப்பது போன்று தோன்றும். இது உடல் எடை கூடவில்லை என்றாலும் கூடியது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும்.

மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பு புரோஜெஸ்ட்ரான் அளவு அதிகரிப்பதால் அதிகமாக சாப்பிட தோன்றும். அதிக பசி எடுக்கும். மேலும் செரட்டோனின் என்ற நொதியின் அளவு குறைவதால் சர்க்கரை பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளத் தூண்டும். அளவுக்கு அதிகமான கலோரிகள் உடலில் சேர்ந்து உடல் எடை கூடுவதற்கு காரணமாகின்றன.

மாதவிடாய் காலத்தில் உடலில் மக்னீசியம் குறைபாடு ஏற்படுவதால் உடல் எடை அதிகரிக்கக்கூடும். இது குறையும் போது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். மக்னீசியம் குறைவதால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுகின்றன. மக்னீசியம் அதிகமாக சாப்பிடும் உணர்வை கட்டுப்படுத்தும்.

சிறிய விஷயங்களுக்குக் கூட அளவுக்கு அதிகமாக கோபம் வரும். சிலருக்கு ஒருவித மனச்சோர்வு பதற்றத்தை ஏற்படுத்தும். வசதியற்ற நிலையை உணர்வதால் மனநிலையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெய் பொருட்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.

கூடுமானவரை வீட்டிலேயே சமைத்து உண்பதால் எடை கூடுவதை தவிர்க்கலாம். மேலும் பசியை தவிர்ப்பதற்கு உலர் பழங்கள், நட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். ஒமேகா-3 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் மக்னீசியம் அளவு அதிகரிக்கும்.

பாதிப்பு அதிகமாக இருந்தால் கால்சியம், விட்டமின் பி, சி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர் குடிக்க தோன்றாவிட்டாலும் தேவையான தண்ணீர் குடியுங்கள். இவற்றை செய்வதால் உங்கள் மாதவிடாய்க்கால தீர்வுகள் நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *