செய்திகள்டிஎன்பிஎஸ்சிதமிழகம்போட்டித்தேர்வுகள்

ஆஹா ! அதிகரிக்கும் குரூப் 4 பணியிடங்கள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பணியிடங்களை அதிகரித்து இருக்கின்றது. டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்க தேர்வாணையம் அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் ஜூலை மாதம் நடத்தப்பட்டது. சுமார் 15 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். இதற்கான அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 7382 அத்துடன் தற்போது 2,500 பணியிடங்கள் சேர்க்கும் போது காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 9870 ஆகும்.

போட்டித் தேர்வு என்பது தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் கனவாக உள்ளது . டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்பு பலருக்கு உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க ; TNPSC GROUP 4 தேர்வு எப்போது..? காலி பணியிடங்கள் எத்தனை..?

குரூப் 4

குரூப் 4 தேர்வில் முடிந்த நிலையில் தற்போது விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. ஜனவரி மாதத்தில் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் குரூப் 4 நடத்தப்பட்டு ஆறு மாதங்கள் முடிந்து இருக்கின்றது. அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளிவரும் என்ற தகவலால் தேர்வர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

மேலும் படிக்க ; டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *