OTTயில் அதிகரிக்கும் படம் ரிலீஸ் மக்களின் பாடு திண்டாட்டமா?
அடுத்த OTT ரிலீஸ்!
ஹீரோ ஹீரோயின் படங்களுக்கு நடுவுல போட்டி இருக்கும் ஆனால் படத்தை ரிலீஸ் பண்ற தளங்களுக்கு நடுவில் போட்டி இருக்குன்னு கொரோனா கண்டுபிடிச்சி இருக்கு. திரையரங்குகள் இல்லாததனால OTTல ரிலீஸ் பண்ணப்படற படங்கள் மக்களுக்கு ஒரே கன்பூஷனா இருக்கு. எந்த ஆப்புக்கு சந்தா கற்றதும் தெரியாமல் முழிக்கிறார்கள் அமேசான் ப்ரைம்/ நெட்பிளிக்ஸ்/ ஜி5/ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி இப்படி எல்லாம் மொழியிலேயே வர திரைப்படங்கள் கொரோனாவால் OTTயில் அடுத்தடுத்து ரிலீஸ் பட்டியலிடப்பட்டிருக்கு. இவ்வாறு வெளியிடப்படும் பல படங்கள் இயக்குனர்களின் முதல் படமாக இருக்கிறது.
டேனி
வரலட்சுமி சரத்குமார் காவல் அதிகாரியாக கதாநாயகியை மையப் படுத்தி எடுக்கும் படம் டேனி. இயக்குனர் சந்தானமூர்த்தியின் முதல் படம். 2019 ல் வெளிவர வேண்டிய எந்த படம் பல சர்ச்சையினால் தாமதமாகி தற்போது திரையரங்கங்கள் இல்லாத சமயத்தில் OTTயில் ரிலீசாகிறது.
டேனி, காவல் துறையில் இருக்கும் நாயின் பெயர். சர்க்கார் படத்தில் வில்லியாக வந்தவர் தற்போது ஆக்ஷனில் இறங்கியுள்ளார் வரலட்சுமி சரத்குமார். போலீஸ் அதிகாரியாக மிரட்டும் வரலட்சுமி சரத்குமார் தன் தொழிலுக்கு துணை புரியும் நாயாக வருகிறது.
டீசர்
2019 டிசம்பரில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. போலீஸ் பார்வைக்கு ஒரு சம்பவம் வர அதில் களமிறங்கும் போலீஸ் அதிகாரியான வரலட்சுமி சரத்குமார் மற்றும் போலீஸ் துறையின் நாய் டேனி. விறுவிறுப்பான கதை தளத்துடன் அமைந்துள்ளது டேனி திரைப்படம்.

ட்ரெய்லர்
கைதி மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் டேனி படத்தின் ட்ரெய்லரை இணையதளத்தில் ஜூலை 7 மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ளார். இதனையொட்டி ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் ப்ரைம் டைமில் சமீபத்தில் வெளியான பொன்மகள்வந்தாள் பென்குயின் போன்ற கதை நாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களின் வரிசையில் டேனியும் அமைந்துள்ளது. ஒரே ஒரு சேஞ்சுகதாங்க இந்த படம் ஜீ5யில் வெளியாகுகிறது.
மக்களுக்கு பொன்மகள் வந்தாள் பெண்குயின் படங்கள் ஏமாற்றத்தை அளித்ததாக கூறுகின்றனர். அதே போல் டேனியும் இருக்குமா? சந்தா கட்டி படத்தைப் பார்க்கும் அளவிற்கு படம் தரமாக இருக்குமா? போன்ற கேள்விகள் வரிசை கட்டிக் கொண்டிருக்கிறது.