மீண்டும் கொரோனாவா இந்தியாவுக்கு எச்சரிக்கை
2020 முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக உலகமே ஸ்தம்பித்து நின்றது. அடுத்த நாற்பது நாட்களுக்கு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்குமாம், ஐயோ சாமி என பெருமூச்சு விட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு மீண்டும் அடுத்த ஒரு அடியாக கொரோனா இருந்து விடுமோ என்று அச்சம் இருக்கின்றது.
கிழக்கு சீனா, கொரியா, ஜப்பான் ஆசிய நாடுகளில் கொரோனா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது அடுத்த 40 நாட்களில் இந்தியாவிற்கும் அது சவாலாக இருக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது தற்போது கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் குறைவாக இருக்கின்றது.
இந்தியாவில் தற்பொழுது வரை உயிரிழப்புகளும் குறைவு தான் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் அனுமதிக்கப்படுபவர் எண்ணிக்கையும் குறைவாக இருக்கின்றது. ஆனால் இன்னும் போகப்போக அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற தெற்காசிய நாடுகளில் கொரோனா தொற்று தற்போது பெருகி கொண்டிருக்கின்றது மேலும் இது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்திய மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றது.