அதிகரிக்கும் கோவித்-19 மத்திய அரசு அறிவுரை!
இந்தியாவின் மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கோவித்-19 தொற்றானது அதிகரித்து வருகின்றது. மத்திய அரசு இதுகுறித்து அறிவித்துள்ளது. கோவித்- 19 நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்கள் எடுக்க வேண்டுமென மத்திய அரசு அறிவித்து இருக்கின்றது.
அதிகரித்து வரும் கோவித்-19 எண்ணிக்கை
குறிப்பிட்டுள்ள மகாராஷ்டிரா கேரளம், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று நோய் குறைக்க மாநில அரசுகள் வேகமாக முடுக்கி விடப்படுகின்றன. கடமையான விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சை
மேலும் சிகிச்சை நடவடிக்கைகளை சீராக வழங்க வேண்டும். மேலும் உருமாறும் வைரஸின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இது பல்வேறு நாடுகளின் பெரிய வருகின்றது. இந்தியாவில் இதன் தாக்கம் ஆங்காங்கே காணப்படுகின்றது. ஆகவே இதுகுறித்து துரிதகதியில் செயல்பட வேண்டியது அவசியமாகின்றது.
மாநில சுகாதரத்துறை நடவடிக்கை
மாநிலங்களின் சுகாதார செயலாளர்களுக்கு மத்திய அரசு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்யும் காத்திருக்கின்றது மாநில செயலாளர்கள் மாநிலம் முழுவதும் பெருகி வரும் மக்கள் இயக்கத்தை சரிசெய்ய வேண்டும்.
சமூக இடைவெளி வலியுறுத்தல்
மேலும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் மக்கள் கூட்டமாக கூடும் அதை தவிர்க்க வேண்டும். இந்தியாவின் பெஸ்ட், டிராக், ட்ரீட் முறையை பின்பற்றி மாநிலங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் தொற்று நோய் தடுக்க மக்களுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். கூட்டமாக கூடுவதை தவிர்க்க அறிவுரை வழங்க வேண்டும்.
தடுப்பூசி பயன்பாடு
அத்துடன் தடுப்பூசி ஊக்குவிக்க வேண்டும் மேலும் சுகாதார செயலாளர்கள் தொடர்ந்து மாநிலத்தில் நோய்தொற்று எண்ணிக்கையை கண்காணித்து தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.