பெருகி வரும் கொரோனா விழிப்புணர்வுடன் இருங்கள் மக்களே
சத்தம் இல்லாமல் பெருகிவரும் கொரோனா சமூக இடைவெளியை மறந்து போகும் மக்கள் வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் சவாலன சூழல் சமாளிக்க வேண்டும். பலவித சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கின்றது.
அதிகரித்து வரும் நோய் எண்ணிக்கையைச் சமாளிக்க வேண்டிய கட்டத்தில் அரசு இருக்கின்றது. அரசுச் செயல்பாட்டுக்கு இந்தக் கொரோனா பெரிய சவாலாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வளவோ மாற்றங்களை நாம் செய்தாகிவிட்டது. ஆனால் அதற்கு இன்னும் வெளிவரவில்லை இந்தியாவில் அதிகரித்துவரும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 90 ஆயிரத்து 802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அரசுக்கு இது பெரும் அதிர்ச்சி மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு குறைவு சமூக இடைவெளி மறந்து போகின்றன. இதனால் பாதிப்பு அதிகமாகும் கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் 41 லட்சத்தைத் தாண்டிவிட்டது. அரசு மக்களுக்குப் பல்வேறு உபாயங்களை தெரிவித்து வருகின்றது. ஆனாலும் மக்கள் நிலைமையின் தீவிரத்தை இன்னும் முழுமையாக உணரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதற்கு முழுப்பொறுப்பையும் அரசை மட்டுமே ஏற்காது அரசு மக்களுக்கு அறிவுரைகள் கொடுக்கின்றது சிகிச்சைகள் தருகின்றது. பொதுமக்களும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்து 626 பேர் ஆகும். இந்தியாவில் தினம் கொரோனா காரணமாகப் பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தொடுகின்றது. தற்பொழுது இந்தியா பிரேசிலை முந்தி 2 இடத்தில் இருக்கின்றது.
நாடு முழுவதும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவண்ணம் இருக்கின்றது. மாஸ்க் அணிவது மட்டும்தான் இங்குச் சரியாக இருக்கின்றது. சமூக இடைவெளி என்பதில்லை மற்றும் அத்துடன் பொது இடங்களில் தூய்மை பாதுகாப்பு என்பது குறைவாக இருக்கின்றது. படித்த இளைஞர்கள் பலர் சமூக இடைவெளியை மறந்து விடுகின்றனர். பொது இடங்களில் நோய்க் காலங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் இளைஞர்களே பின்பற்றாத நிலை ஏற்படுகின்றது.
கொரோனாவை தடுக்க ஆரோக்கியமான உணவு மற்றும் அவசியமான உடற்பயிற்சி வேண்டும். குறைந்தப் பட்சம் வெளியே செல்ல வேண்டும் அதிக பட்சம் வீட்டில் இருக்க வேண்டும். வெளியே சென்று வந்ததும் கைக்கால்கள் கழுவ வேண்டும். முடிந்த அளவிற்கு குளிக்க வேண்டும் இது நோய் தொற்றை தடுக்கும்.