செய்திகள்தமிழகம்வணிகம்

இவற்றிற்கெல்லாம் வரி விதிக்க வாய்ப்பு வல்லுநர்கள் கூறுவதென்ன

டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கைப்படி வரி மற்றும் மனிதவள வல்லுனர்கள் சம்பளத்தை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர்களுக்கு ஏற்படும் வரி பாதிப்பை குறைக்கலாம் என்கின்றனர்.

பல்வேறு நிறுவனங்களின் மனித வளத்துறைகளிடமிருந்து தங்கள் ஊழியர்களின் வரிச் சுமையை குறைக்க எவ்வாறு உதவலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை நாடி வருவதாக கிளியர் டேக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்த்தி குப்தா தெரிவித்துள்ளார்.

வரி சட்டங்களில் கட்டமைப்பு மாற்றமில்லாமல் சம்பள கூறுகளை மறு சீரமைப்பது இந்தக் கட்டத்தில் உதவாது இப்போதைக்கு நிறுவனங்கள் திருப்பி செலுத்தும் வகையில் WFH செலவை வழங்கி வருகின்றன. என்று ரண்ட் ஸ்டாட் இந்தியாவின் தலைமை மக்கள் அதிகாரி அஞ்சலி ரகுவன்ஷி கூறியுள்ளார்.

தொற்றுநோயை கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டில் விடுமுறை எடுத்துவிட்டு விடுப்பு போக்குவரத்து செலவு LTA கேட்க முடியாது. எனவே இதுவும் வரியாக விதிக்கப்படலாம். இங்கே குறிப்பிட வேண்டியது என்னவென்றால் நான்கு ஆண்டுகளில் LTA வை இரண்டு முறை கோரலாம். மேலும் பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கியுள்ளது.

இதில் இன்டர்நெட் பில், மின் கட்டணம், லேப்டாப் வாங்கும் செலவு மற்றும் வேலை செய்ய ஃபர்னிச்சர் வாங்கும் செலவு ஆகியவை அடங்கும். இத்தகைய சந்தர்ப்பத்தில் அந்த தொகை ஊழியர்களுக்கு வரியாக விதிக்கப்படும். ஊழியர்கள் தினசரி அலுவலகத்திற்கு வருவதில்லை என்பதால் போக்குவரத்து செலவுக்கு வரிவிலக்கு கொடுக்க முடியாது.

அதே சமயம் அதைத் திருப்பி செலுத்துவதாக இருந்தால் உண்மையில் என்ன செலவு ஆனது என்பதற்கான ஆதாரங்களை வழங்கும் போது வரி விலக்கு அளிக்கலாம். வேலை சம்பந்தமான போக்குவரத்து இல்லாத நிலையில் வரி விதிக்கப்படலாம். போக்குவரத்து செலவு, வீட்டு வாடகைச் செலவு, விடுமுறை செலவு போன்றவை வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு ஒதுக்கத் தேவையில்லை.

இவைகளுக்கு வரி விதிக்கப் படலாம் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா சமூக பரவலால் வீட்டில் இருந்தே வேலை செய்வது WFH நிறைய செலவுகளை மிச்சப்படுத்தி இருக்கிறது என மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

ஆனால் இதன் காரணமாக ஆண்டு வரி உயரக்கூடும் என்பது பலருக்கு தெரியாது. வொர்க் பிரம் ஹோம் செய்தால் செலவு குறைவு என நினைத்தீர்களா? கூடுதல் வரி விதிக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *