கொழுப்பை குறைக்க உணவில் இதை சேர்த்துக் கொள்ளுங்க
தோல் ஆரோக்கியமாக இருக்க கத்தரிக்காய் பிஞ்சாக சாப்பிடுவது நல்லது. வீட்டிலேயே வளர்த்து பிஞ்சாக பறித்து சாப்பிட வேண்டிய காய்களில் கத்தரிக்காயும் ஒன்று. தோலில் ஏற்படும் புற்றுநோயை தடுத்து தோல் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன.
- கத்தரிக்காய் உடலுக்கு சூடு தரும் காய்கறி வகையைச் சேர்ந்தது.
- உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
- தக்காளியைப் போலவே புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் அதிகம் காணப்படுகிறது.
கத்தரிக்கா கொழுப்புச்சத்து குறைக்கும்
சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் பி பயன்படுகிறது. பசியின்மையை போக்கும். உடலுக்கு வலு குறைவது தடுக்கப் படுகின்றன. மூச்சு விடுதலில் சிரமம் முதலியவை தடுக்கப்படுகின்றன. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு தேவையான 24 கலோரி ஆற்றல் தருகிறது. 9 சதவீதம் நார்ச்சத்து உடையது. மெட்டபாலிசம் ஸ்பைக் கலோரிகளை எரிக்க வல்லன.
கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை தானாகவே குறையும் என்று கூறப்படுகிறது. கத்தரிக்காயில் அடங்கி இருக்கும் நர்சிம்மின் எனும் வேதிப்பொருள் ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான இரும்புச் சத்தை குறைத்து வெளியேற்ற உதவுகின்றன. மாரடைப்பு தவிர்க்கப்படுகின்றன. பிஞ்சு கத்தரிக்காயில் பொதிந்திருக்கும் ஆன்தோசயனின் வேதிப்பொருள் வயது முதிர்வை தடுத்து இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கின்றன.
புத்துணர்வை பெற கத்தரிக்கா
கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது. நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்குவது மட்டுமின்றி, சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது. தூக்கத்தைக் கொடுக்கும். கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட்டு வர இரவில் வழக்கமான நேரத்திற்கு முன்னரே தூக்கம் பிடிக்கும்.
தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படுவோருக்கு இது நல்ல தீர்வைத் தருகிறது. கத்தரிக்காயின் தோலில் உள்ள ஆன்தோசயனின் எனும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கி புத்துணர்வைத் தரக் கூடியது. இது மட்டுமின்றி அந்தோசயனின் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்பட்டு மேலும் பரவாமல் தடுக்கின்றன.
இதயம் பாதுகாப்பாக கத்தரிக்கா
கத்தரிக்காயில் இருக்கும் நீர் சத்து, பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்பு சத்தை குறைக்க உதவும். ஒரு உன்னதமான மருந்தாக கூறப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி வைப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகின்றன. ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும். கத்தரிக்காய் குறிப்பாக நாட்டு கத்தரிக்காய் நல்ல மருத்துவகுணம் உடையது. இதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொண்ட நீங்களும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.